ஆசிரியர் கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு:
ஆசிரியர் கல்வி படிப்புகளுக்கு அங்கீகாரம்
அளிப்பதற்காக கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களிடமிருந்து விண்ணப்பங்களை
தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்.சி.டி.இ.) வரவேற்றுள்ளது.
விண்ணப்பங்களை ஜூலை 31-க்குள் ஆன்-லைன் மூலம் சம்பந்தப்பட்ட
என்.சி.டி.இ. மண்டலக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றம்
ஜூன் 18 அன்று பிறப்பித்த உத்தரவு மற்றும் பல்வேறு மாநிலங்களில் கல்வியியல்
கல்லூரிகளை மத்திய அரசு தொடங்க வேண்டும் என்ற நீதிபதி வர்மா கமிஷனின்
பரிந்துரைகள் அடிப்படையில் இந்த அறிவிப்பை என்.சி.டி.இ. வெளியிட்டுள்ளது.
மேலும் விவரங்களை www.ncte-india.org என்ற இணைய தளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.








