- KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Wednesday 24 July 2013

விரும்பியதை தேர்ந்தெடுக்கும் தலைமுறை: டாக்டர்களின் குழந்தை இன்ஜினியர்:

ஒவ்வொரு மாணவருக்கும் ஐ.ஐ.டி., யில் படிக்க வேண்டும் என்பது கனவு. ஐ.ஐ.டி.,யில் சேர வேண்டுமெனில் ஜே.இ.இ., மெயின் மற்றும் ஜே.இ.இ., அட்வான்ஸ்டு ஆகிய நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும். இது பின் தங்கிய, கிராமப்புற மாணவர்களுக்கு கடினமானது. இதையும் மீறி நிறைய மாணவர்கள் சாதிக்கின்றனர்.


இந்நிலையில், நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று, ஐ.ஐ.டி.,யில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள், எத்தகைய சூழ்நிலையில் இருந்து வருகின்றனர். அவர்களது பெற்றோர் எந்த துறையில் இருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.ஐ.டி.,யில் படிக்கும் மாணவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேர், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோரின் குழந்தைகள். அதே வேளை, தொழிலதிபர்கள் மற்றும் விவசாயிகளின் குழந்தைகள் சொற்ப அளவுக்கே உள்ளனர். இன்ஜினியர்களின் குழந்தைகளை விட, டாக்டர்களின் குழந்தைகள், அதிகளவில் ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுகின்றனர்.

சமீபத்தில் நடந்த ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வுக்கு 5.06 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். ஆனால் வெற்றி சதவீம் வெறும் 5.8 சதவீதம் பேர் தான். ஐ.ஐ.டி.,களில் மொத்த இடங்கள் 9,885. வெற்றி பெற்றவர்களில் 9.92 சதவீதம் பேர், டாக்டர்களின் குழந்தைகள்.

இதற்கு அடுத்து அரசு ஊழியர்களின் குழந்தைகள் உள்ளனர். மூன்றாவதாக, ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் குழந்தைகளும், குறிப்பிடத்தக்க அளவில் சாதித்துள்ளனர். இவர்களது சதவீதம் 5.21 சதவீதம்.

இது குறித்து ஐ.ஐ.டி., (அட்வான்ஸ்டு) தலைவர் எச்.சி.குப்தா கூறியதாவது: "குழந்தைகளுக்கு அரசு ஊழியர்கள், பாதுகாப்பான எதிர்காலத்தை திட்டமிட்டு செய்து தருகின்றனர். இன்ஜினியர்களை விட டாக்டர்கள், குழந்தைகளை இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்ய வைக்கின்றனர். காரணம் டாக்டர் படிப்பை முடித்து பணியை தொடர்வதற்கு, 9 ஆண்டுகள் ஆகின்றன. இன்ஜினியரிங்கில் படிக்கும் மாணவர்கள் நான்கு ஆண்டுகளில் பணியில் சேர்ந்து விடுகின்றனர். இது தான் இன்ஜினியரிங் படிப்பை டாக்டர்கள் தேர்வு செய்ய காரணம்" என்றார்.

 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H