திட்டமிட்டால் எளிதாகும் வெளிநாட்டுக் கல்வி:
வெளிநாடு சென்று படிக்க விருப்பமுள்ளவரா நீங்கள்.. ஆம் என்றால், நீங்கள்
படிக்கும் கல்லூரியை, திட்டமிட்டு தேர்வு செய்ய வேண்டியது அவசியம். இந்திய
மாணவர்களின் வெளிநாட்டு கல்வி மோகம் அதிகரித்து வருகிறது.டிகிரி அல்லது
டிப்ளமோவை வெளிநாட்டில் முடித்து விட்டு, பயோடேட்டாவில் அதை இடம் பெறச்
செய்து, நல்ல வேலையில் சேர்ந்து செட்டில் ஆவதில் உள்ள ஆர்வமே, இதற்கு
காரணம்.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா,
பிரான்ஸ், நியூசிலாந்து போன்ற நாடுகளிலுள்ள கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டு
மாணவர்களுக்கு பல சலுகைகளுடன்,கல்வியை வழங்குகின்றன. தேர்ந்தெடுக்கும்
கல்வி நிறுவனம், நம் விருப்பப் பாடத்தில் சிறந்த கல்வி
நிறுவனமா என்பதை அறிந்த பின் சேர்வது நல்லது.
நிறுவனமா என்பதை அறிந்த பின் சேர்வது நல்லது.
எவ்வாறு தேர்ந்தெடுப்பது?
எந்த பாடத்தில் ஆர்வம் அதிகமோ, அந்தப் பாடத்தையே தேர்வு
செய்ய வேண்டும். ஒரு பாடத்தை, நியூ டிரென்ட் அல்லது தெரிந்தவர் படிப்பதாலோ,
தேர்வு செய்வது தவறு. விருப்பம் இல்லாத பாடத்தை 3 அல்லது 5 ஆண்டுகள்
படித்து விட்டு, அத்துறையில் வளர்வதும், அதிக சம்பளம் பெறுவதும் இயலாத
காரியம். விருப்பப் பாடமாக இருந்தால், முன்னேற்றத்திற்கான வழியை
அறிவீர்கள். எதிர் காலத்தில் சொந்த தொழில் தொடங்கவும் அது வழி செய்யும்.
நாடுகளும், பிரபலமான பாடங்களும்
வணிக மேலாண்மை, ஐ.டி., போன்ற படிப்புகள், அமெரிக்கா,
இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும், பி.இ.,
மற்றும் சயின்ஸ், ஜெர்மனியிலும், ஏரோநாட்டிகல், மருத்துவம், அமெரிக்கா
மற்றும் ரஷ்யாவிலும், அக்கவுன்ட்ஸ், பைனான்ஸ், அமெரிக்கா மற்றும்
ஆஸ்திரேலியாவிலும், டிராவல், ஹாஸ்பிடாலிட்டி, பிரிட்டன், ஆஸ்திரேலியா
மற்றும் சிங்கப்பூரிலும், பேஷன் டிசைன், பிரான்ஸ் மற்றும் இத்தாலியிலும்
சிறந்து விளங்குகின்றன.
என்ன செய்ய வேண்டும்?
என்ன செய்ய வேண்டும்?
கல்வி உதவித்தொகை, நிதி உதவி, பெல்லோஷிப் மற்றும் வேறு
சலுகைகள் உள்ளதா, கல்விக்கு முக்கியத்துவம், அட்வான்ஸ்டு லெவல் பாடத்
திட்டம் உள்ளதா, பகுதி நேர வேலைக்கு வாய்ப்பு உள்ளதா என ஆராய வேண்டும்.
நாம் செல்லும் நாடு, தூதரகங்கள் பற்றிய தகவல்களை சேகரிப்பது முக்கியம்.
நாடுகளைப் பற்றிய தகவல்களுக்கு
நீங்கள் தேர்வு செய்வது அமெரிக்கா எனில், அதைப்பற்றிய தகவல்களை யு.எஸ்.இ.எப்,ஐ., (யு.எஸ்., எஜூகேஷன் இன் இந்தியா) மற்றும் www.usief.org.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளளாம்.
இங்கிலாந்து: www.britishcouncil.org/india.html மற்றும் www.ucas.com
ஆஸ்திரேலியா: www.studyinaustralia.gov.au
நியூசிலாந்து: www.studyingnewzealand.com
சிங்கப்பூர்: www.singaporeedu.gov.sg
அயர்லாந்து: www.educationireland.ie
பிரான்ஸ்: www.edufrance.in
ஜெர்மனி: www.daad.de/deutschland/index.en என்ற இணையதளங்களில் இருந்து தகவல்களைப் பெறலாம்.
தேர்வுகள்
முன்பே திட்டமிட்டு, ஜி.ஆர்.இ., ஜி.மேட்., டி.ஓ.இ.எப்.எல்.,
ஐ.இ.எல்.டி.எஸ்., டி.ஓ.இ.ஐ.சி., எம்.கேட்., எல்.சேட்., போன்ற
தேர்வுகளுக்கு தயாராகி, தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும்.
குறைந்தபட்சம் 8 முதல் 12 மாதங்களாவது தயாராவது அவசியம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...