பார்வையற்றோருக்கு சென்னையில் இலவச கணினி பயிற்சி:
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு, சென்னையில், ஓராண்டு இலவச கணினி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயன்பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள், ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கம் சார்பில், சென்னையில், ஓராண்டு கணினி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், கணினி, திறன் வளர்ப்பு பயிற்சி, மற்றும் இந்தி பேச்சுப் பயிற்சி வகுப்பு நடத்தப்படும்.
பயிற்சி காலத்தில், தங்கும் இடம், மாதந்தோறும், 200 ரூபாய் ஊக்கத்தொகை
வழங்கப்படும். அடுத்த மாதம், 15 தேதிக்குள், விண்ணப்பங்களை அனுப்ப
வேண்டும். மேலும், விபரங்களுக்கு, 94445 49865, 89257 67989 ஆகிய எண்களில்
தொடர்பு கொள்ளலாம்.







