இந்தியாவில் கால்நடை மருத்துவம் பயிலும் பிரான்ஸ் மாணவர்கள்:
திண்டுக்கல்லில் செல்லப்பிராணிகளுக்கான மருத்துவ மையமான "லைக்கா பெட் கிளினிக்" 1983ல் துவக்கப்பட்டது.பல ஆண்டுகளுக்கு முன், இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்று கால்நடை மருத்துவ படிப்பு படிப்பார்கள். தற்போது நமது நாட்டில் அதிநவீன தொழில்நுட்பத்தில் சிறந்தபயிற்சி அளிக்கப்படுவதால் வெளிநாட்டிலிருந்து பலர் இந்தியாவிற்கு வந்து படிக்கின்றனர்.
அந்த வகையில் இந்த மையத்தில் பிரான்ஸ் நாட்டில் உள்ள
கால்நடை மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 40 நாட்கள் பயிற்சி
பெற்றனர்.
மேலும் இந்த மையம் மூலம், கால்நடைகளுக்கு கண்புரை நீக்கி,
லென்ஸ் வைத்தல், சிறுநீரக குழாயில் கல்நீக்குதல், எலும்பு அறுவை சிகிச்சை
செய்தல், கர்ப்பப்பை நீக்குதல், ஸ்கேன் மூலம் பரிசோதனை சிகிச்சை உட்பட
அதிநவீன அறுவை சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.