செப்டம்பர் 20-க்கு மேல் எம்.பி.பி.எஸ். இறுதிக் கட்ட கலந்தாய்வு:
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். இறுதிக் கட்ட கலந்தாய்வு
செப்டம்பர் 3-ஆவது வாரம் நடைபெறும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு
அறிவித்துள்ளது.அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏற்பட்டுள்ள எம்.பி.பி.எஸ். காலியிடங்கள்,
சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்.
காலியிடங்கள், அரசு பல் மருத்துவக் கல்லூரியின் பி.டிஎஸ். காலியிடங்கள்,
சுயநிதி
பல் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ்.
காலியிடங்கள் ஆகியவற்றுக்கு கலந்தாய்வு நடத்தப்படும். மேலும் திருச்சி
எஸ்ஆர்எம் குழும சென்னை மருத்துவக் கல்லூரி அளித்துள்ள 93 அரசு ஒதுக்கீட்டு
எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை தாகூர் மருத்துவக் கல்லூரி அளித்துள்ள 97
அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் ஆகியவற்றுக்கும் கலந்தாய்வு நடத்த
மருத்துவக் கல்வி தேர்வுக் குழு திட்டமிட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். இறுதிக் கட்ட கலந்தாய்வு குறித்த விவரங்களை
வரும் 13-ஆம் தேதி முதல் சுகாதாரத் துறையின் இணையதளத்தில் மாணவர்களும்
பெற்றோரும் தெரிந்து கொள்ளலாம் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு
அறிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல் இரண்டு கட்டங்களாக
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். கலந்தாய்வு நடத்தப்பட்டு வகுப்புகள் நடைபெற்று
வருகின்றன.







