விருதுக்கு விண்ணப்பிக்க நேரு யுவகேந்திரா அழைப்பு:
நேரு யுவகேந்திராவில், மாவட்ட அளவில் சிறந்த இளைஞர், மகளிர் மன்றங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட உள்ளது. இந்த விருது பெறும் இளைஞர், மகளிர் மன்றத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும்.தமிழக அரசின் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, இந்திய அரசு நேரு யுவகேந்திராவுடன் இணைக்கப்பட்டுள்ள ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இளைஞர், மகளிர் மன்றங்களே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
கடந்த 2012-13ம் ஆண்டில் சுகாதாரம், சுற்றுச்சுழல்,
எழுத்தறிவு, சமூக நலம், தொழிற்கல்வி, மகளிர் அதிகாரம், விளையாட்டு, கலை
நிகழ்ச்சி, தேசிய சர்வதேச தினவிழாக்கள், உள்ளூர் மற்றும் சமூக தீமைகளை
களைவது தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்ட இளைஞர், மகளிர் மன்றங்கள் உரிய
புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை நேரு யுவ கேந்திரா அலுவலகத்தில் பெற்றுக்
கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, "மாவட்ட இளைஞர்
ஒருங்கிணைப்பாளர், நேரு யுவ கேந்திரா, 93, அவ்வையார் தெரு, கலெக்ட்ரேட்
பின்புறம், ஈரோடு. தொலைபேசி: 0424 2275227, 9487308620" என்ற முகவரியில்
வரும் 10ம் தேதிக்குள் நேரில் அளிக்க வேண்டும்.







