கூகுள் நிறுவனம் தேர்வு செய்தது
அண்ணா பல்கலைக்கழக மாணவர் ஒருவரை வருடத்திற்கு ரூ.21 லட்சம் சம்பளத்திற்கு கூகுள் நிறுவனம் வேலைக்கு தேர்ந்து எடுத்துள்ளது. கேம்பஸ் இண்டர்வியூஅண்ணா
பல்கலைக்கழகத்தின் நேரடிகட்டுப்பாட்டில் உள்ள கிண்டி என்ஜினீயரிங்
கல்லூரி, எம்.ஐ.டி. கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, கட்டிடக்
கலைக்கல்லூரி ஆகியவற்றில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வேலை
வாங்கிக்கொடுப்பதற்காக
அண்ணாபல்கலைக்கழக வேலைவாய்ப்பு துறை ஏற்பாடு
செய்திருந்தது. அதன்படி கடந்த ஒரு மாதமாக பெரிய பெரிய கம்பெனிகள்
வரவழைக்கப்பட்டன. இந்த கேம்பஸ் இண்டர்வியூவில் 600 பேர் கலந்துகொண்டனர்.
அவர்களில் 90 பேர் வேலைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டனர்.ரூ.21 லட்சம்இதில்
ஒரு மாணவர் கூகுள் நிறுவனத்திற்கு வேலைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.
அவருக்கு வருடத்திற்கு ரூ.21 லட்சம் சம்பளம். அதாவது மாதம் ரூ.1 லட்சத்து
75 ஆயிரம் ஆகும். ரூ.10 லட்சம் முதல் 21 லட்சம் வரை சம்பள வேலைக்கு 90 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர். அடுத்த
கட்டமாக இப்போது தேர்ந்து எடுக்கப்படாமல் உள்ள மாணவர்களுக்கு மற்ற
கம்பெனிகள் உடனடியாக வர உள்ளன. அவர்களில் 90 சதவீதத்தினர் கண்டிப்பாக
தேர்ந்துஎடுக்கப்படுவார்கள் என்று வேலைவாய்ப்பு அதிகாரி தியாகராஜன்
தெரிவித்தார். 4 மண்டலங்களில் ...தமிழ்நாடு முழுவதும் உள்ள
அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளில் படிக்கும்
மாணவ-மாணவிகளுக்கு நவம்பர், டிசம்பர் மாதங்களில் கேம்பஸ் இண்டர்வியூ
நடத்தப்பட உள்ளது. இது 4 மண்டலங்களாக பிரித்து நடத்தப்பட இருக்கிறது. இதில்
322 கம்பெனிகள் வர உள்ளன. ஏராளமான மாணவர்களை வேலையில் அமர்த்துவதை
அண்ணாபல்கலைக்கழகம் நோக்கமாக கொண்டுள்ளது என்று அண்ணாபல்கலைக்கழக
துணைவேந்தர் பேராசிரியர் எம்.ராஜாராம் தெரிவித்தார்.







