அதிக மதிப்பெண் பெற்ற பிசி., எம்பிசி மாணாக்கருக்கு ரொக்கப் பரிசு : முதல்வர் வழங்கினார்:
மாநில அளவில் 2012-2013ஆம் கல்வியாண்டில் 10
மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று
இடங்களைப் பெற்ற பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர்,
சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு
ரொக்கப் பரிசுகளை வழங்கிவாழ்த்தினார்.பிற்படுத்தப்பட்டோர்,
மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர்
மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர்
வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக
தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மாநில அளவில்
10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும்
மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் ரொக்கப் பரிசுகள் வழங்கும்
திட்டமும் இதில் ஒன்றாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ் மாநில அளவில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்
தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ, மாணவியருக்கு முறையே 25
ஆயிரம் ரூபாய், 20 ஆயிரம் ரூபாய் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் என்ற
வீதத்திலும், 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று
இடங்களைப் பெறும் மாணவ, மாணவியருக்கு முறையே 50 ஆயிரம் ரூபாய், 30 ஆயிரம்
ரூபாய் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் என்ற வீதத்திலும், பிற்படுத்தப்பட்டோர்,
மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பைச்
சேர்ந்தவர்களில் ஒவ்வொரு பிரிவிலும் மாணவர்களுக்குத் தனியாகவும்,
மாணவியருக்குத் தனியாகவும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி, 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு
பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற 80
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும்
சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு 14 லட்சத்து 5
ஆயிரம் ரூபாய்க்கான ரொக்கப் பரிசுகள் வழங்கப்படுகிறது. இவர்களில் 7 மாணவ,
மாணவியருக்கு ரொக்கப்பரிசுகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று வழங்கி
வாழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன்,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ந. சுப்ரமணியன்,
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.
அப்துல் ரஹீம், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர்,
மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச்
செயலாளர் டாக்டர் கே. அருள்மொழி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து
கொண்டனர்.