குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்கியது:
தமிழநாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் நவநீதகிருஷ்ணண் சென்னை பாரிமுனையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது குரூப் 2 தேர்வுக்கு 6 லட்சத்து 85 ஆயிரம் பேர் விண்ணப்பத்துள்ளதாக கூறினார், மேலும் 115 நகரங்களில் தேர்வு நடைபெறும் என்றார். கடந்த மார்ச் மாதம் 220 பொறியாளர்களை தேர்வு செய்ய நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தேர்வானவர்களுக்கு அடுத்த கட்டமாக நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளதாக கூறினார்.
வணிகவரித் துறை துணை அலுவலர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி,
சார்பதிவாளர் உள்ளிட்ட குரூப் 2 பிரிவில் உள்ள 1061 பணி இடங்களுக்கு வரும்
டிசம்பர் ஒன்றாம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. www.tnpsc.gov.in என்ற
இணையதளம் மூலம் இன்று இரவு 12 மணி வரை விண்ணப்பிக்கலாம்







