பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு:
பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக," கலெக்டர் ராஜாராமன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: பிரதமரின் கல்வி உதவி தொகை திட்டத்தின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட கல்வியான பி.இ., பி.டெக்., பி.டி.எஸ்., எம்.பி.பி.எஸ்., பி.எட்., பி.பி.ஏ., பி.சி.ஏ. , எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பி.பார்ம் உள்ளிட்ட படிப்புகளில் முதல் ஆண்டில் சேர்ந்துள்ள முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள், "www.desw.gov.in" இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கல்லூரியிடமிருந்து Bonafied certificate உடன் இணைக்க வேண்டும்.
விண்ணப்பம் மற்றும் உரிய ஆவணங்களை நவ.,20க்குள் உதவி இயக்குனர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், சிவகங்கையில் ஒப்படைக்க வேண்டும்.
இதன் கீழ், மாணவருக்கு ரூ.24 ஆயிரம், மாணவியருக்கு ரூ.27
ஆயிரம் கல்வி உதவி தொகை வழங்கப்படும். ஸ்டேட் வங்கி அல்லது பஞ்சாப் நேஷனல்
வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டும்.
விருப்பமுள்ள சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம், என்றார்.







