பிளஸ் 2 தகுதிக்கு இரயில்வேயில் அப்ரென்டிஸ் பயற்சி:
மத்திய அரசின் அமைச்சகத்தின் காலியிடங்கள், அரசு
பணிக்கான காலியிடங்களை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் (UPSC)
எழுத்து தேர்வுகள் மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்து வருகிறது.
இந்த அமைப்பின் சார்பாக 2014 -ஆம் ஆண்டிற்கான ஸ்பெஷல் கிளாஸ் ரயில்வே அப்ரென்டிஸ் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் சார்பாக 2014 -ஆம் ஆண்டிற்கான ஸ்பெஷல் கிளாஸ் ரயில்வே அப்ரென்டிஸ் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு: 01.01.2014 தேதிப்படி 17 - 21-க்குள்
இருத்தல் வேண்டும். அதாவது 02.01.1993-க்கு பின்னரும் 01.01.1997-க்கு
முன்னரும் பிறந்திருக்க வேண்டும்.
கல்வித் தகுதிகள்: இயற்பியல், கணிதம் போன்ற
பாடங்களுடன் +2 முடித்தவர்களும்ள், கணிதம், இயற்பியல் துறையில் பட்டம்
பெற்றிருக்க வேண்டும். கணிதம் மற்றும் இயற்பியல் துறையில் 2ம் ஆண்டு, முதல்
ஆண்டு முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். படிக்கும் வருடத்தைப்
பொறுத்து தகுதி நிலைகளில் சில மாறுதல்கள் இருக்கும். முழு விபரங்களுக்கு
இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுக் கட்டணம்: ரூ.100. இதனை ஏதாவதொரு பாரத ஸ்டேட்
வங்கியின் கிளைகளிலோ அல்லது நெட் பேங்கிங் முறையிலோ செலுத்தியன் பின்பு
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: தமிழகத்தில் மதுரை மற்றும் சென்னை
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.11.2013
மேலும் தேர்வு உள்ளிட்ட முழுமையான விபரங்கள் அறிய www.upsc.gov.in/exams/notifications/2014/scra/scra_eng.pdf> என்ற
இணையதளத்தைப் பார்க்கவும்.








