அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் அறிவிப்பு:
தீபாவளிக்கான போனசாக 20 சதம் வழங்கப்படும். இந்த அறிவிப்பின்படி தமிழக மின்வாரியம், போக்குவரத்து கழகம், ரேசன் ஊழியர்கள், ரப்பர்கழகம், கூட்டுறவு, பொது சர்க்கரை ஆலைகள், பால் உற்பத்தியாளர் சங்கம், வாணிபகழகம், துறையை சேர்ந்த ஊழியர்கள் பயன்பெறுவர். இது போல் வீட்டுவசதி, குடிநீர் வடிகால் வாரியத்தை சேர்ந்த சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சத போனசும் வழங்கப்படும்.
கூட்டுறவு பணியாளர்களுக்கு 10 சதமும், லாபம் ஈட்டிய பால் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு 20 சதமும் போனசாக வழங்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.








