சாஸ்திரா பல்கலை: பி.எச்.டி ஆராய்ச்சி படிப்புக்கு சேர்க்கை:
தாஞ்சாவூரில் உள்ள சாஸ்திரா பல்கலைக்கழகத்தில், பி.எச்டி., பொறியியல் படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆராய்ச்சியில் சிவில், இஇஇ, மெக்கானிக்கல், இசிஇ உள்ளிட்ட படிப்புகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் பி.டெக்., எம்.டெக்., எம்.இ, எம்.பார்ம், எம்.பில்,
எம்.வி.எஸ்சி ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை குறித்த விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.
பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அக்.,31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். நவ.,15ம் தேதிக்குள் நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது.
கூடுதல் தகவல்களுக்கு சாஸ்திரா பல்கலைக்கழக இணையதளத்தை அணுகலாம்.








