Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
இந்தியாவின் உயர்கல்வி பாடத்திட்டம், இனிமேலும் வழக்கமான ஒரு
சம்பிரதாயமாக இருக்கக்கூடாது. மாறாக, மாணவர்களிடையே ஆராய்ச்சியையும்,
புத்தாக்க முயற்சியையும் தூண்டுவதாக அமைய வேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப்
முகர்ஜி கூறியுள்ளார்.
மேகாலயா மாநிலத்தில் ஒரு பல்கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய
பிரணாப், இதுதொடர்பாக மேலும் கூறியதாவது: நாட்டின் பல்கலைகள், தங்களின்
பாடத்திட்டங்களின் மூலமாக, ஆராய்ச்சி மேம்பாட்டை ஊக்கப்படுத்த வேண்டும்.
பல்கலைகளில் புத்தாக்க முயற்சிகளைத் தொடங்க வேண்டிய உடனடித் தேவை
எழுந்துள்ளது.
பிரச்சினைகள், தீர்க்கப்படும் சாத்தியங்களுடன் அணுகப்பட வேண்டும். கல்வி
மேலாண்மையின் பல்வேறு அம்சங்களில், போதுமான நெகிழ்வுத் தன்மையை
அனுமதிப்பதன் மூலமாக அறிவுத்திறன் கலலாச்சாரம் வளர்க்கப்பட வேண்டும்.
உயர்கல்விக்கான கட்டமைப்பை மேம்படுத்தும் இந்திய அரசின் முயற்சிகள் மூலமாக,
சில நல்ல விளைவுகள் ஏற்பட்டுள்ள போதிலும், போதுமான தரமின்மை காரணமாக,
மிகச்சில இந்திய உயர்கல்வி நிறுவனங்களே, உலகளாவிய தரத்தில் உயர்ந்துள்ளன.
இந்தியாவின் எந்தவொரு பல்கலையும், உலகின் சிறந்த பல்கலைகளுள் ஒன்றாக
இலலை. உலக தர நிர்ணயத்திற்கு கணக்கில் எடுக்கப்படும் அம்சங்களை நமது
உயர்கல்வி நிறுவனங்கள் அதிகமாகவே பெற்றிருந்தபோதிலும், அவற்றை சரியான
முறையில் வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்காத காரணத்தினால், தகுதியான
நிலையை நம்மால் அடைய முடியவில்லை.
நம்மிடம் திறமையான ஆசிரியர்களும், மாணவர்களும் இருந்தபோதிலும்,
அவர்களிடையே போதுமான ஒருங்கிணைப்பு இருப்பதில்லை. சரியான நேரத்தில் சரியான
நடவடிக்கையை நாம் மேற்கொண்டால்தான், அதற்கான சிறந்த பிரதிபலனை நாம்
அடைவோம்.
இந்தியாவில் பிறந்து, இந்தியாவில் படித்த பல விஞ்ஞானிகள், அறிவியலுக்கான
நோபல் பரிசைப் பெற்றிருந்த போதிலும், அமெரிக்க பல்கலைகளில்
பணியாற்றும்போதுதான் அவர்களுக்கு அந்தப் பரிசுகள் கிடைத்தன. இதனால்,
நமக்கான முழு பெருமையும் கிடைக்காமல் போனது. இவ்வாறு அவர் பேசினார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








