கல்வித்தரத்தை மேம்படுத்த ஆளுநர் கருத்துக்கள் பரிமாற்றம்:
மாணவர்களின் உயர்கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில், நேற்று மும்பையில் முதன் முறையாக ஆளுநர் குழு இணைந்த கூட்டம் நடத்தப்பட்டது.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி முன்னிலையில் எட்டு உறுப்பினர் கொண்ட குழு
மற்றும், குழுவின் தலைவராக மகாராஷ்ட்டிரா ஆளுநர் கே.சங்கர நாரயாணன் உள்பட
அனைவரும் கலந்து கொண்டு மாணர்களின் கல்வித்தரத்தை குறித்து
கலந்தாலோசித்தனர்.
இக்கூட்டத்தில் பிகார் ஆளுநர் டி.ஒய் பாடீல், கேரளா ஆளுநர் நிக்கில்
குமார், கோவாவை சேர்ந்த பாரதி வீர் வாஞ்சு உள்பட 7 மாநிலங்களின் ஆளுநர்கள்
ஒன்று கூடி மாணக்கர்களின் கல்வித்தரம் பற்றி ஆலோசனை நடத்தினர்.
சரியான துணைவேந்தர்கள் நியமிக்காதல், பயிற்சி மற்றும் அனுபவம் வாய்ந்த
ஆசிரியர்கள் இல்லாததும், மாணவர்களின் தரம் மேம்படுத்த மாணவர் கடன்
வழங்குதல் மற்றும் ஆராய்ச்சி சூழலை உருவாக்கி தராததுமே முக்கிய காரணம்
என்று விவாதிக்கப்பட்டது. இறுதியாக ஜனாதிபதியிடம் தங்கள் பிரச்னை குறித்து
அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.








