பொறியியல் பட்டதாரிகளுக்கான சிறப்பு படிப்புகள்:
பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கான டிப்ளமோ படிப்பை
எலக்ட்ரானிக் புராடக்ட் டிசைன் (DEPD) பிரிவில் National Institute of
Electronics & Information Technology நடத்துகிறது. இப்படிப்பிற்கான
மாணவர் சேர்ககை நடைபெற்று வருகிறது. இதற்கு தகுதியானவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
படிப்பின் பெயர்: PG Diploma in Electronics Product Design (DEPD)
கால அளவு: 6 மாத முழு நேர படிப்பாகும்.
தகுதி: ECE, EEE, E & I போன்ற Electronics பாடத்தை முதன்மைப்
பாடமாகக் கொண்ட பிரிவுகளில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ
அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
படிப்பு நடைபெறும் மையங்கள்:
NIELIT, Aurangabad
NIELIT, Chennai
C-DAC Hyderabad
கல்விக் கட்டணம்: ரூ.45,000 அரசு விதிகளின் படி எஸ், எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு மற்றும் கட்டண சலுகை வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: மேற்குறிப்பிட்ட பயிற்சி
மையங்களில் வைத்து நடைபெறும் நுழைவுத்தேர்வு மற்றும் மையங்கள்
நிர்ணயிக்கும் விதிகளின் அடிப்படையில் தகுதியான மாணவர்கள் படிப்பில்
சேர்த்துக் கொள்ளப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300 இதனை ஆன்லைன் முறையில்
செலுத்த வேண்டும். ஆன்லைன் முறையில் விண்ணப்பக் கட்டணம் செலுத்த
முடியாதவர்கள் C-DAC என்ற பெயரில் Hyderabad -ல் மாற்றத்தக்க வகையில்
ரூ.350-க்கான டிடி எடுத்து ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
ஆன்லைன் பதிவிற்கான கடைசி நாள்: அக்.,14
கூடுதல் தகவல்களுக்கு www.cdachyd.in/esdm/training என்ற இணையதளத்தை பார்க்கலாம்.








