நாட்டின் எதிர்காலத்துக்காக கல்வி, விஞ்ஞான துறைகளில் அதிக முதலீடு செய்ய வேண்டும்-பாரத ரத்னா விருது பெற்ற விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் பேட்டி:
நாட்டின்
எதிர்காலத்துக்காக கல்வி, விஞ்ஞான துறையில் அதிக முதலீடு செய்ய வேண்டும்
என்று பாரத ரத்னா விருது பெற்ற விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் கூறினார். பெங்களூரை
சேர்ந்த விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவுக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு
அறிவித்து உள்ளது. இதைத்தொடர்ந்து, அவர் நேற்று பெங்களூரில் நிருபர்களுக்கு
பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-எதிர்கால இந்தியா அதிநவீன
விஞ்ஞானத்தை கொண்ட நாடுகள் தான் உலகளவில் உண்மையான வளர்ச்சியை எட்டி
உள்ளது. அவ்வாறு இல்லாத நாடுகள் தெரியாமல் போய் விடும். அதனால் எதிர்கால
இந்தியா, விஞ்ஞானத்தில் தான் உள்ளது.இதை கருத்தில் கொண்டு
இந்தியாவின் பாதுகாப்புக்காக கல்வி, விஞ்ஞான துறைகளில் அதிக நிதியை அரசு
முதலீடு செய்ய வேண்டும். நாட்டின் பங்கு குறியீடு, தொழில் நன்றாக இருந்தால்
மட்டும் நல்ல நிலையை எட்டி விட முடியாது. நிரந்தரமாக நல்ல நிலைக்கு
அதிநவீன விஞ்ஞானம் மிகவும் அவசியம். முட்டாள்அரசியல்வாதிகள்முன்னேற்றத்துக்கான
வழி என்றால் அது விஞ்ஞானம் தான். இதன் மீது மறைந்த முன்னாள் பிரதமர் நேரு
நம்பிக்கை கொண்டவர் என்பது மகிழ்ச்சிக்குரியது. ஆனால், விஞ்ஞான துறைக்கு
அதிக ஒத்துழைப்பு கிடைக்காதது துரதிர்ஷ்டவசமானது. கல்வி மற்றும்
விஞ்ஞான துறையில் எவ்வளவு முதலீடு செய்கிறோமோ அதை பொறுத்து தான் நாட்டின்
எதிர்காலம் இருக்கும். ஆனால் முட்டாள் அரசியல்வாதிகள் அறிவியல்துறைக்கு
போதிய பணம் ஒதுக் குவது இல்லை. நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு
விஞ்ஞான துறையில் முதலீட்டை 1 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக அதிகரிக்க
வேண்டும். இது நடக்கும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. உழைப்பது இல்லை விஞ்ஞான
துறையில் அரசு செய்யும் குறைந்த முதலீட்டிலும் அதிக பணிகளை செய்து
இருக்கிறோம். ஒருபோதும் சிறந்த அளவில் நிதி ஒதுக்கவில்லை. விண்வெளி, அணு
ஆராய்ச்சி துறைகளுக்கு மட்டும் நல்ல முறையில் நிதி ஒதுக்கப்படுகிறது. இதை
விட முக்கியத்துவம் வாய்ந்த கல்வியில் போதிய கவனம் செலுத்துவது இல்லை.நாம்
சீனர்கள் போன்று கடினமாக உழைப்பது இல்லை. அதிக பணம் கிடைத்தால்
வெளிநாட்டுக்கு செல்லக்கூட தயாராக இருக்கிறோம். முந்தைய காலத்தை போன்று
இன்றைய தொழில்நுட்பம் இல்லை. அதிநவீன விஞ்ஞானத்துக்கு ஏற்ப அதிகளவில்
தொழில்நுட்ப வளர்ச்சியும் ஏற்பட்டு உள்ளது. இன்றைய விஞ்ஞானத்துக்கும்,
நாளைய தொழில்நுட்பத்துக்கும் இடையே சிறிய காலஇடைவெளி தான் உள்ளது. கண்டுபிடிப்பு தொழில்நுட்பம்,
புதிய கண்டுபிடிப்புகளில் நவீன முறைகளை இந்தியா கற்க வேண்டும் என்று நான்
கருதுகிறேன். புதிய கண்டுபிடிப்பில் 140 நாடுகளில் இந்தியா 66-வது இடத்தில்
உள்ளது. அதிலிருந்து முதல் 10 இடங்களுக்குள் வர வேண்டும். விஞ்ஞான
ஆராய்ச்சி கட்டுரைகள், புத்தகங்கள் குறைந்த எண்ணிக்கையில் உருவாவதும்
துரதிர்ஷ்டவசமானது. உலகளவில் ஆராய்ச்சியில் தற்போது அமெரிக்கா 16.5 சதவீதம்
பெற்று முதலிடத்தில் உள்ளது. 12 சதவீதத்துடன் 2-வது இடத்தில் உள்ள சீனா,
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 16.5 அல்லது 17 சதவீதம் பெற்று முதலிடத்தை
பிடிக்க உள்ளது. இந்தியா 2.5 முதல் 3 சதவீதம் பெற்று உள்ளது.இவ்வாறு சி.என்.ஆர்.ராவ் கூறினார். சித்தராமையாநேரில் வாழ்த்துஇதற்கிடையே,
பாரத ரத்னா விருது பெற்றதற்காக முதல்-மந்திரி சித்தராமையா நேற்று விஞ்ஞானி
சி.என்.ஆர்.ராவ் வீட்டுக்கு நேரில் சென்று அவருக்கு வாழ்த்து
தெரிவித்தார்.







