கிரிக்கெட்
தான் எனது உயிர் மூச்சு அதனுடனான தொடர்பு எப்பொழுதும் நீடிக்கும் என்று
ஓய்வுக்கு பின்னர் அளித்த முதல் பேட்டியில் சச்சின் தெண்டுல்கர் கூறினார்.
உருக்கமான பிரிவுஇந்திய
கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமும், சாதனை நாயகனுமான சச்சின்
தெண்டுல்கரின் 24 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை மும்பையில் நேற்று
முன்தினம் முடிந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியுடன்
வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது.நளினமான ஆட்டத்தின் மூலம் உலகம்
முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்த தெண்டுல்கரை இனிமேல்
கிரிக்கெட் பேட்டுடன் (மயக்கும் மகுடி) ஆடுகளத்தில் காண முடியாதது
என்பதால், அவரது பிரிவு உபசார டெஸ்ட் போட்டியை பார்க்க திரண்டு இருந்த
ரசிகர்கள் அவருக்கு உற்சாகமாகவும், உருக்கமாகவும் பிரியா விடை அளித்தனர். கண்ணீருடன்
மைதானத்தில் இருந்து விடைபெற்ற தெண்டுல்கர் உருக்கமான உரை நிகழ்த்தி நெகிழ
வைத்தார். அவர் மைதானத்தை விட்டு கிளம்பும் வரை ‘சச்சின், சச்சின்’ என்ற
முழக்கம் எல்லா திசைகளிலும் எதிரொலித்த வண்ணம் இருந்தனு. கிரிக்கெட்டுக்கு
முழுக்கு போட்ட தெண்டுல்கருக்கு பிரதமர் உள்பட பல்வேறு தரப்பினரும்
வாழ்த்து தெரிவித்தனர். இணைய தளங்கள் இயங்குவதில் சிரமம் ஏற்படும் அளவுக்கு
அதன் மூலமும் வாழ்த்துகள் குவித்தன. தெண்டுல்கர் பேட்டிகிரிக்கெட்டில்
இருந்து ஓய்வு பெற்ற பின்னர் 40 வயதான சச்சின் தெண்டுல்கர் முதல் முறையாக
நேற்று மும்பையில் பிரத்யேக பேட்டி அளித்தார். நூற்றுக்கணக்கான
பத்திரிகையாளர்களின் பலவிதமான கேள்விகளுக்கும் சரளமாக இந்தி, மராத்தி
மற்றும் ஆங்கிலத்தில் சளைக்காமல் சுமார் ஒரு மணி நேரம் பதிலளித்தார்.
தெண்டுல்கர் அளித்த பேட்டி வருமாறு:-24 வருடங்களாக சர்வதேச
கிரிக்கெட் போட்டியில் விளையாடியதை எனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான
விஷயமாக கருதுகிறேன். கிரிக்கெட் தான் எனக்கு வாழ்க்கையாகும். அது எனக்கு
ஆக்ஸிஜன் (உயிர் வாழ இன்றியமையாதது) போன்றது. கடந்த 40 ஆண்டுகாலத்தில்
ஏறக்குறைய 30 ஆண்டுகள் கிரிக்கெட் தான் விளையாடி இருக்கிறேன். எனது
வாழ்க்கையை 75 சதவீதம் கிரிக்கெட் தான் ஆக்கிரமித்து இருந்தது. இதனால்
ஓய்வுக்கு பின்னரும் கிரிக்கெட்டுடனான எனது தொடர்பு எந்த வகையிலாவது
தொடரும். எதிர்காலம் குறித்து உடனடியாக முடிவு செய்யவில்லை. ஏனெனில் நான்
ஓய்வு பெற்று 24 மணி நேரம் தான் ஆகிறது. 24 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில்
விளையாடி இருக்கும் எனக்கு குறைந்தபட்சம் ‘ரிலாக்ஸ்’ ஆக 24 நாட்களாவது
வேண்டாமா?. அதன் பின்னர் என்ன செய்யலாம் என்று முடிவு எடுப்பேன்.வருத்தம் இல்லைஓய்வு
பெற்று விட்டாலும், மீண்டும் நான் கிரிக்கெட் விளையாட முடியாது என்ற
நினைப்பு எனக்கு இன்னும் வரவில்லை. 24 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கை
எனக்கு கனவு பயணமாக இருக்கிறது. இதுவரை நான் செய்த கிரிக்கெட் பயணம்
அற்புதமானது. கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதில் எனக்கு எந்த வருத்தமும்
இல்லை. கிரிக்கெட்டில் இருந்து நான் விலகுவதற்கு இதுவே சரியான தருணம்
என்று கருதுகிறேன். கிரிக்கெட்டை எப்பொழுதும் நான் உற்சாகமாக
அனுபவித்து விளையாடினேன். 100 சதவீத பங்களிப்பு அளிக்க முடியாது என்று
எப்போது எனது மனது சொல்கிறதோ? அப்போது கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவேன்
என்று ஏற்கனவே உங்களிடம் சொல்லி இருந்தேன். 24 ஆண்டுகளுக்கு பிறகு தான்
அந்த மனநிலை எனக்கு தோன்றியது. எனவே ஓய்வு அறிவிப்பை வெளியிட்டேன். எனக்கு
பலமுறை காயங்கள் ஏற்பட்டன. காயத்தில் இருந்து விடுபட்டு ஆட்டத்துக்கு
திரும்புவது என்பது எளிதான காரியம் அல்ல. ஒரு கட்டத்தை எட்டியதும் உங்கள்
உடல் இதற்கு மேல் சுமையை தாங்க முடியாது என்பதை உணர்த்தும். உடலுக்கு ஓய்வு
தேவைப்படுகிறது. தொடர்ச்சியாக அதிக சுமையை உடலால் தாங்க முடியாது. உணர்ச்சி வசப்பட்டேன்ஓய்வு
முடிவை எடுத்த போது, எனது குடும்பத்தினர் உணர்ச்சி வசத்துக்கு ஆளானார்கள்.
ஆனால் நான் அதிகம் உணர்ச்சிவசப்படவில்லை. ஓய்வு முடிவு சரியானது என்பது
எனக்கு தெரியும். வீரர்கள் எனக்கு பிரிவு உபசாரம் அளித்த விதமே என்னை
உணர்ச்சி வசப்பட வைத்தது. எனது பிரிவு உபசார டெஸ்டில் மக்கள் அளித்த
அமோகமான வரவேற்புக்கு, எனது உணர்வை எந்த மாதிரி வெளிப்படுத்துவது என்பது
தெரியவில்லை. எல்லோருக்கும் பெரிய நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.
அது எனக்கு எப்பொழுதும் சிறப்பு வாய்ந்தது.ஆடுகளத்திற்குள் நுழைந்த
போது, உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் இந்திய அணியில் இடம் பெறுவது இதுவே
கடைசி முறை என்பதை உணர்ந்ததால் எனது கண்களில் உணர்ச்சி பொங்கி விட்டது.
நான் வீரர்கள் அறைக்கு திரும்புகையில், கைகுலுக்கிய வெஸ்ட் இண்டீஸ்
வீரர்களின் முகத்தை பார்க்கவில்லை. ஏனெனில் அப்போது எனது கண்களில் இருந்து
கண்ணீர் வடிந்து கொண்டு இருந்தது. இதயப்பூர்வமாக ஆடுவேன்எனது
24 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் நிறைய சவால்களை எதிர்கொண்டேன். ஆனால்
இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்ததால்
சவால்களுக்கு தீர்வு கண்டேன். முழங்கையில் ஏற்பட்ட காயம் தான் என்னை அதிகம்
பாதித்தது. அதில் இருந்து மீள 4 மாதங்களுக்கு மேல் ஆனது. அப்போது மீண்டும்
நான் களம் திரும்ப முடியுமா? என்ற சந்தேகம் எழுந்து நெருக்கடிக்கு
ஆளானேன். அது எனது வாழ்க்கையில் கடினமான காலமாகும். உடல் ரீதியாக
நான் இனிமேல் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட முடியாமல் போனால் கூட,
இதயப்பூர்வமாக நான் எப்பொழுதும் இந்தியாவுக்காக ஆடிக் கொண்டிருப்பேன்.
இந்தியாவுக்காக பிரார்த்தித்து கொண்டு இருப்பேன். பயிற்சியாளர்எனது
ஆரம்ப கால பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேகர் நான் எவ்வளவு சிறப்பாக
விளையாடினாலும், சிறப்பாக விளையாடினேன் என்று பாராட்டமாட்டார். ஏனெனில்
அதனால் மெத்தனமாகி விடக்கூடாது என்பதில் குறியாக இருப்பார். எனது கடைசி
ஆட்டத்துக்கு பின்னர் நான் பேசுகையில், ‘இனிமேல் நான் சர்வதேச கிரிக்கெட்
விளையாட முடியாது. எனவே நீங்கள் என்னை பாராட்டலாம் என்று எனது பயிற்சியாளரை
பார்த்து தமாஷாக தெரிவித்தேன். நேற்று (நேற்று முன்தினம்) எனக்கு பாரத
ரத்னா விருது அறிவிக்கப்பட்டதும் என்னுடன் டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசிய
அச்ரேகர் நன்றாக விளையாடினாய் என்று பாராட்டினார். ஒரு போதும் கிடைக்காத
இந்த வாழ்த்தால் பூரிப்படைந்தேன். ஆடுகளம் மட்டுமின்றி அதற்கு
வெளியே நடக்கும் விஷயங்கள் குறித்தும் கடந்த 30 ஆண்டுகளாக எனது சகோதரர்
அஜித்துடன் ஆலோசிப்பேன். எங்கள் இருவருக்கும் இடையிலான உறவு மிகவும்
அழகானது. எங்கள் உறவு குறித்து வார்த்தைகளால் விவரிப்பது கடினமானது.
இருவருடைய கனவும் கிரிக்கெட் தான். நான் நாட்டுக்காக மட்டுமின்றி எனது
சகோதரர் அஜித் சார்பிலும் விளையாடுவதாக நினைக்கிறேன். எனது ஓய்வு எனது
சகோதரனுக்கு உணர்ச்சிமயமாக இருந்தாலும், அதனை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. மறக்க முடியாத தருணம்2011-ம்
ஆண்டு உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது எனது கிரிக்கெட் வாழ்க்கையில்
மறக்க முடியாத தருணம். இந்த கனவு நிறைவேற நான் 22 ஆண்டுகள் காத்து
இருந்தேன். அதே நேரத்தில் 2003-ம் ஆண்டு உலக கோப்பை
இறுதிப்போட்டியில் நமது அணி தோற்றதை எனது கிரிக்கெட் வாழ்க்கையில்
மிகப்பெரிய ஏமாற்றமாக கருதுகிறேன். இவ்வாறு தெண்டுல்கர் கூறினார்.







