பள்ளிக்குள் புகுந்த வெளிநாட்டு ஆந்தையால் பரபரப்பு:
போடி அருகே, பள்ளிக்குள் புகுந்த வெளிநாட்டு ஆந்தையால் பரபரப்பு ஏற்படது. பின்னர் ஆந்தையை வனத்துறையினர் வனப்பகுதியில் விட்டனர்.
போடி அருகே சிலமலை அரசு ஆரம்ப பள்ளியில் வியாழக்கிழமை வெளிநாட்டு
ஆந்தை புகுந்தது. பகல் நேரம் என்பதால் கண் பார்வை தெரியாமல் அங்கும்
இங்குமாக பறந்தது. இதனை பள்ளி தலைமையாசிரியை செல்வி தலைமையில் ஆசிரியர்கள்
பத்திரமாக மீட்டனர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ்வரனுக்கு தகவல்
தெரிவித்தனர். அவரது அறிக்கையின் பேரில் உத்தமபாளையம் வனத்துறைக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் பள்ளிக்கு வந்த வனக்காவலர்கள் பாண்டியன்,
முத்தழகு ஆகியோர் ஆந்தையை பத்திரமாக கைப்பற்றி கன்னிமார் கோவில்
வனப்பகுதிக்கு கொண்டு சென்று அங்கு வனப்பகுதியில் விட்டனர்.
பள்ளியில் புகுந்த ஆந்தையை பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள்,
பொதுமக்கள் பார்வையிட்டனர். பிடிபட்ட ஆந்தை இளம் பருவமுடையது என்றும், இது
வளர்ந்தால் 10 அடி வரை சிறகுகள் விரியும் என்றும் வனத்துறையினர்
தெரிவித்தனர்.








