சி.பி.எஸ்.இ., பள்ளிகளை கண்காணிப்பில் கொண்டுவர அரசு முடிவு:
தமிழகத்தில் இயங்கும் சி.பி.எஸ்.இ., வாரியத்துடன் இணைக்கப்பட்ட பள்ளிகள் முறையான கண்காணிப்பின்றி இயங்கி வருவதையடுத்து, அவற்றை முறையாக கண்காணிப்பின் கீழ் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.அரசின் இந்த முடிவை, பள்ளிகளின் நிர்வகிப்பாளர்களும், இதர கல்வியாளர்களும் பரவலாக வரவேற்றுள்ளனர்.
ஏனெனில், பல CBSE பள்ளிகள், நடப்பு கல்வியாண்டு முடிவதற்குள்ளாகவே, தங்களின் அடுத்தாண்டிற்கான மாணவர் சேர்க்கை செயல்பாட்டினைத் தொடங்கி விடுகின்றன. அவை, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் விதிமுறைகளை மதிப்பதில்லை. ஆனால், CBSE அமைப்பின் சட்ட விதிமுறைப்படி, CBSE பள்ளிகள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் விதிமுறைகளுக்கு கீழ்பணிந்து செயல்பட வேண்டும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்முடிவை CBSE பள்ளிகளும் வரவேற்றுள்ளன. "சில குறிப்பிட்ட விஷயங்களில் மாநில அரசுகள் தலையிடுவதில் தவறில்லை. CBSE பள்ளிகளுக்கு சிறந்த உள்கட்டமைப்பு வசதி என்பது முக்கியம். அந்த வகையில் எங்களுக்கு கவலையில்லை" என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.







