ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்காக வகுப்பறைகளுக்கு பெரிய அளவில் இந்தியவரைபடம் உள்பட 3 வரைபடங்கள-பிப்ரவரி மாதத்திற்குள் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு:
ஆசிரியர்கள்
பாடம் கற்பிப்பதற்கு வசதியாக வகுப்பறைகளுக்கு பெரிய அளவில் இந்திய
வரைபடம், தமிழ்நாடு வரைபடம், அந்தந்த மாவட்ட வரைபடம் ஆகியவை கிழியாத
அளவுக்கு பிப்ரவரி மாதத்திற்குள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.முதல்-அமைச்சர் ஜெயலலிதா முதல்-அமைச்சர்
ஜெயலலிதா தமிழ்நாட்டில் கல்வித்துறையை மேம்படுத்தவும், எந்த ஒரு
குழந்தையும் பள்ளிக்கு செல்லாமல் இருக்கக்கூடாது என்று எண்ணியும்
பள்ளிக்கூடம் செல்வதற்கு தேவையான அனைத்தையும் இலவசமாக வழங்கி வருகிறார்.
இந்த
திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா சரியான முறையில்
மாணவர்களுக்கு கிடைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவருகிறார். சபீதா
உத்தரவுப்படி சலுகைகள் சரியான முறையில் வழங்கப்படுகிறதா என்பதை
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் அடிக்கடி அந்தந்த
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் நடத்தி
கேட்டறிகிறார். குறைகள் இருந்தால் அவ்வப்போது நிவர்த்தி செய்கிறார்.வகுப்புகளுக்கு பெரியஅளவில் வரைபடங்கள் அந்த
வரிசையில் புதிதாக வகுப்பு நடத்தும் ஆசிரியர்களுக்கு இந்திய வரைபடம்,
தமிழ்நாடு வரைபடம், அந்த அந்த மாவட்ட வரைபடம் பெரிய அளவில் கரும்பலகை அருகே
போடும் அளவுக்கு வழங்கப்பட உள்ளது. அவை அனைத்தும் அரசியல் வரைபடம் ஆகும். இந்த வரைபடம் வள வளப்பான தாளில் கிழிபடாத அளவுக்கு சிறப்பாக தமிழ்நாடு பாட நூல் நிறுவனம் அச்சடிக்கப்பட உள்ளது. இதற்கான
டெண்டர் விரைவில் விடப்பட்டு அச்சடிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள
அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள்,
நடுநிலைப்பள்ளிகள், உயர் நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றிற்கு
வகுப்புக்கு 3 வரைபடம் வழங்கப்பட உள்ளது.பிப்ரவரி மாதத்திற்குள் வழங்க ஏற்பாடுமொத்தம்
தமிழ்நாடு முழுவதும் 1 லட்சத்து 48 ஆயிரத்து 247 வகுப்புகளுக்கு மொத்தம் 4
லட்சத்து 48 ஆயிரத்து 741 வரைபடங்கள் இந்த பிப்ரவரி மாதத்திற்குள்
விநியோகிக்கப்பட இருக்கின்றன.







