அரசு பள்ளியில் ஓர் சாதனைப் பள்ளி!அறிவியல் கண்காட்சியில் மாநிலத்தில் முதலிடம்!!
அரசு உயர்நிலைப் பள்ளி தெங்கியாநத்தம்,விழுப்புரம் மாவட்டம்.இப் பள்ளி
2011-2012ஆம் கல்வி ஆண்டில் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. கடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 95 சதவீதம் தேர்ச்சி பெற்று கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் முதலிடம் பெற்ற பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.2013-14 ஆம் கல்வி ஆண்டில் மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க
பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களில் ஒன்றாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை வெளிக் கொணரும் வகையில் பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதலின் படி கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அளவில் 08.11.2013 அன்று நடைபெற்ற அறிவியல்கண்காட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி, தெங்கியாநத்தம் 9 ஆம் வகுப்பு மாணவன் ச.சிவக்குமாரின் சிலீப்அலர்ட் & கேஸ் லீக்கேஜ் அலர்ட் என்ற அறிவியல் படைப்பில் முதலிடம்பெற்றார்.13.11.2013 அன்று விழுப்புரம் வருவாய் மாவட்ட அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியிலும் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று ,மாநில அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் பங்குபெற தகுதிபெற்றார்.மேலும் 05.12.2013 முதல் 07.12.2013 வரை காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் ஜெயகோபால் கரோடியா மேல்நிலை பள்ளியில் மாநில அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியிலும் இம் மாணவனின் படைப்பு முதலிடம் பெற்றது . இம்மாணவனின் திறமையை பள்ளிக் கல்வி இயக்குனர்கள் திரு.இரமேஸ்வரமுருகன்,திரு.தேவராஜன் திரு.நரேஷ் அவர்களின் பாரட்டுதலையும் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர் திரு.சா.மார்ஸ், மாவட்டக் கல்வி அலுவலர்திருமதி.கோ.தனமணி மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.கா.மணி அவர்களின் பாராட்டுதலையும் பெற்று தென் இந்தியா அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியிலும் ,தேசிய அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியிலும் பங்குபெற தகுதி பெற்றுள்ளார். முதலிடம் பெற்ற மாணவன் ச.சிவக்குமார் மற்றும் வழிகாட்டி ஆசிரியர்கள் திரு.இரா.சிவப்பிரகாசம் , திருமதி.க.சிவாகயல்விழி ஆகியோர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.பள்ளித்தலைமை ஆசிரியர் திரு.கா.மணி அவர்கள் தலைமையேற்க பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக செயலர் திரு.கெ.சக்திவேல் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.கே.குமரேசன் முன்னிலை வகித்தனர்.மாவட்ட கல்வி அலுவலர் திருமதி கோ.தனமணி அவர்கள் மாணவனை பாரட்டி ரூ 1000 ரொக்கப் பரிசு வழங்கி சிறப்புரை ஆற்றினார்.பள்ளித் தலைமை ஆசிரியர் மாணவனுக்கு நினைவு பரிசும் அறிவியல் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசும் வழங்கி கவுரவித்தார். மேலும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டி சிறப்புரையாற்றினர்.இம் மாணவனின் படைப்பு தேசிய அளவிலும் முதலிடம் பெற நம் அனைவரும் வாழ்த்துவோம்..