சுயமாக பட்டம் வழங்கும் அதிகாரம்-சட்டத்திருத்த ஆய்வுக்கு நிபுணர் குழு அமைப்பு:
கல்லூரிகளுக்கு தாங்களே பட்டங்களை வழங்கிக்கொள்ளும் வகையில் அதிகாரம் அளிப்பது தொடர்பான யு.ஜி.சி சட்டத் திருத்தம் குறித்து ஆய்வுசெய்ய ஒரு நிபுணர் குழுவை யு.ஜி.சி., அமைத்துள்ளது என்று மனிதவளத் துறை இணையமைச்சர் சசிதரூர் தெரிவித்துள்ளார்.
அத்தகைய அதிகாரத்தைப் பெறும்
சுயாட்சிக் கல்லூரிகள், முறையான கல்வி செயல்பாடுகள், நிதி மற்றும் பொது
நிர்வாக விஷயங்கள் ஆகியவற்றை முறையான வகையில் மேலாண்மை செய்வதற்கான
வழிகாட்டுதல்களை UGC வகுத்துள்ளதை ஒட்டி, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய அதிகாரம் பெற்றுள்ள ஒரு சுயாட்சிக் கல்லூரி, தனக்கான தரத்தை
தக்கவைக்க தவறினால், UGC அல்லது சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் ஆகியவை,
சரியாக செயல்படுமாறு சம்பந்தப்பட்டக் கல்லூரியை அறிவுறுத்த முடியும் அல்லது
அக்கல்லூரியின் சுயாட்சி அந்தஸ்தை ரத்து செய்வதைப் பற்றி பரிசீலிக்க
முடியும்.
ராஜ்யசபாவில் சசிதரூர் கூறியதாவது: சுயாட்சிக் கல்லூரிகள், அந்த
அதிகாரத்தைப் பெற்ற பின்னர், நிபுணர் குழுவினால் 3 தொடர்ச்சியான
மதிப்பாய்வுகளுக்கு ஆட்படுத்தப்பட்டு, அதன் அடிப்படையில் எந்தப்
புகார்களுக்கும் ஆட்படாமல் இருந்தால் மட்டுமே, சம்பந்தப்பட்ட
கல்லூரிகளுக்கு சுயமாக பட்டம் வழங்கும் அதிகாரம் வழங்கப்படும். அதேசமயம்,
அவை மீண்டும் UGC குழுவால் மதிப்பாய்வுக்கு உட்படாது.
அதேசமயம், அதுபோன்ற கவுன்சில்களின் நிர்வாக வாரியத்தில், ஒரு UGC பிரதிநிதியை வைத்திருப்பது கட்டாயம். இவ்வாறு அவர் கூறினார்.







