Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் முதல் மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் ‘தினத்தந்தி’ பரிசு நாளை வழங்கப்படுகிறது :
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் முதல் மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் ‘தினத்தந்தி’ பரிசு நாளை வழங்கப்படுகிறது :
கடந்த
ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் தமிழ்நாட்டிலேயே முதல்
இடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நாளை ‘தினத்தந்தி’ தலா ரூ.10 ஆயிரம் பரிசு
வழங்குகிறது. மாணவர் பரிசு திட்டம்மாணவர்களுக்கு கல்வியில் அதிக ஆர்வம் உண்டாக்க மாணவர் பரிசுத்திட்டத்தை ‘தினத்தந்தி’ நடத்தி வருகிறது.அதன்படி
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தமிழ்நாட்டிலேயே முதலாவதாக தேர்ச்சி பெறும்
மாணவர் அல்லது மாணவிக்கு ‘தினத்தந்தி’ ரூ.10 ஆயிரம் பரிசு வழங்குகிறது.
அத்துடன் தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது.மாணவிகள் சாதனைதமிழ்நாட்டில்
கடந்த ஆண்டு நடந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முதல் இடத்தை 9 மாணவிகள்
பிடித்தனர். அவர்கள் 500-க்கு 498 மார்க் வாங்கி சாதனை படைத்தார்கள்.
அவர்களுக்கு ‘தினத்தந்தி’ தலா ரூ.10 ஆயிரம் பரிசு வழங்குகிறது.
தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது.முதல் இடம் பிடித்த மாணவிகளின் விவரம் வருமாறு:-1. எஸ்.அனுஷா, கொங்கு வேளாளர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, பெருந்துறை, ஈரோடு.2. ஜெ.பி.எம்.தீப்தி, புஸ்கோஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, அண்ணாநகர், மேலூர், மதுரை. 3. எம்.காயத்ரி, மாண்ட்போர்டு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, மஞ்சம்பட்டி, திருச்சி. 4. டி.மெர்சியா ஷெரின், மாண்ட்போர்டு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, மஞ்சம்பட்டி, திருச்சி. 5. கே.ஆர்.பொன் சிவசங்கரி, ஈரோடு இந்து கல்வி நிலையம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, மாமரத்துபாளையம், ஈரோடு. 6. சி.எஸ்.சாருமதி, சிருஷ்டி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, பிரம்மபுரம், திருப்பத்தூர். 7. பி.சோனியா, ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள் வெள்ளிவிழா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, மகராஜநகர், பாளையங்கோட்டை. 8. ஆர்.ஸ்ரீதுர்கா, வீனஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம், கடலூர். 9. எஸ்.வினுஷா, ஆக்சிலியம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காந்திநகர், திருப்பத்தூர், வேலூர். தமிழுக்கு பரிசுஇதைத்தவிர
‘தினத்தந்தி’யின் மாணவர் பரிசு திட்டத்தின் கீழ் எஸ்.எஸ்.எல்.சி. தமிழ்
பாடத்தில் மாநிலத்திலேயே முதல் மார்க் எடுப்பவருக்கு ரூ.5 ஆயிரம் பரிசும்,
தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது.கடந்த ஆண்டு நடந்த தேர்வில்
தமிழ்நாட்டில் முதல் இடம் பெற்ற மாணவிகள் எஸ்.அனுஷா, ஜே.பி.எம்.தீப்தி,
எம்.காயத்ரி, கே.ஆர்.பொன் சிவசங்கரி, சி.எஸ்.சாருமதி, பி.சோனியா,
ஆர்.ஸ்ரீதுர்கா, எஸ்.வினுஷா ஆகிய 8 பேரும் தமிழில் முதல் மார்க் (100-க்கு
99) எடுத்துள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் பரிசும், தங்கப்பதக்கமும்
வழங்கப்படுகிறது.பிளஸ்-2எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சையில்
தமிழ்நாட்டிலேயே முதலாவதாக தேர்ச்சி பெறும் மாணவர் அல்லது மாணவிக்கு
‘தினத்தந்தி’ ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படுவது போல், பிளஸ்-2 பரீட்சையில்
தமிழை ஒரு பாடமாக எடுத்து, தமிழ்நாட்டிலேயே, அதிக மார்க் வாங்கும் மாணவர்
அல்லது மாணவிக்கு ‘தினத்தந்தி’ ரூ.10 ஆயிரம் பரிசு வழங்குகிறது.
தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது.கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில்
தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்து தமிழ்நாட்டிலேயே முதல் மாணவர்களாக
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வித்யா விகாஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்
எஸ்.ஜெயசூரியா, நாமக்கல் கிரீன் பார்க் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி
மாணவர் எஸ்.அபினேஷ் ஆகிய 2 பேரும் தேர்ச்சி பெற்றனர். அவர்கள் 1,200-க்கு
1,189 மார்க் வாங்கி இருந்தனர். அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசும்,
தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது. மாணவர் எஸ்.ஜெயசூரியாவின், தந்தை
பெயர் கே.செந்தில்குமார், திருச்செங்கோடு பாடவி தெரு, 7-வது சந்து
பகுதியில் இவர்களது வீடு உள்ளது. மாணவர் எஸ்.ஜெயசூர்யா, தற்போது சென்னை
மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்.மாணவர்
எஸ்.அபினேசின், தந்தை பி.சேகர். திண்டுக்கல் மாவட்டம் குள்ளனம்பள்ளியில்
நந்தனம் ரோடு பகுதியில் இவர்களது வீடு உள்ளது. மாணவர் எஸ்.அபினேஷ், தற்போது
சென்னை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்.ஆதித்தனார் கல்லூரிவிழாவில்எஸ்.எஸ்.எல்.சி.,
பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு நாளை
(வெள்ளிக்கிழமை) திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெறும் விழாவில்
பரிசு வழங்கப்படுகிறது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








