தமிழக அரசின் பல்வேறு துறைகளில், உதவியாளர், "கிளர்க்" என்ற குமாஸ்தா நிலையில், 2,269 பணியிடங்கள், காலியாக உள்ளன. 2012-13ல் ஏற்பட்ட இந்த காலி இடங்களை நிரப்ப, மே 18ல் போட்டி தேர்வு நடக்கும் என டி.என்.பி.எஸ்.சி., நேற்று அறிவித்தது. பட்டதாரிகள், www.tnpsc.gov.inஎன்ற இணையதளம் வழியாக, மார்ச் 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
வங்கி அல்லது அஞ்சலகங்களில், கட்டணம் செலுத்த, மார்ச், 7 கடைசி நாள். கூடுதல் விவரங்களுக்கு, தேர்வாணைய இணையதளத்தை பார்வை இடலாம்.







