தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக புதிய பதிவாளராக பேராசிரியர் எஸ். கலைச்செல்வன் பொறுப்பேற்றுள்ளார்.
ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பதிவாளர் பணியிடம் காலியாக இருந்தது. இதில் பொறுப்பு பதிவாளர் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் முழு நேரப் பதிவாளராக நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் கலைச்செல்வன் நியமனம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து புதிய பதிவாளராக செவ்வாய்க்கிழமை அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவர் நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இயற்பியல் துறை உதவிப் பேராசிரியராக 1990-ல் சேர்ந்து, பின்னர் இணைப் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றவர்.







