தமிழுக்கும்,
இலக்கியத்துக்கும், இளைஞர்களுக்கும் தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய வகையில்,
இறையன்பு ஐ.ஏ.எஸ். எழுதிய புத்தகங்கள், படிப்போரை நிச்சயம் மகானாக்கும்
என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் புகழாரம் சூட்டினார்.இறையன்பு படைப்புலகம்வெ.இறையன்பு
ஐ.ஏ.எஸ்., எழுதிய 40 புத்தகங்களில் உள்ள அரிய கருத்துகளை பல்வேறு
நீதிபதிகள், தமிழ் ஆராய்ச்சியாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள்,
மாணவர்கள், ஆசிரியர்கள் ஆராய்ந்து 190 கட்டுரைகள் படைத்திருக்கிறார்கள்.
இந்த
அனைத்து கட்டுரைகளையும், மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி
பல்கலைக் கழக மானியக்குழு நிதி உதவியுடன் ‘இறையன்பு படைப்புலகம்’ எனும்
தலைப்பில் 1,500 பக்கங்களாக தொகுத்து, 3 தொகுதி நூல்களாக படைத்துள்ளது.இந்த
நூல்களின் திறனாய்வுக்காக, ‘இறையன்பு படைப்புலகம்’ எனும் தலைப்பில் தேசிய
அளவிலான 2 நாள் கருத்தரங்கம் சென்னையில் நேற்று தொடங்கியது.சென்னை
ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்.ஜானகி மகளிர் கல்லூரியில்
நடைபெற்ற தொடக்க விழாவுக்கு, இந்திய முன்னாள் ஜனாதிபதிஏ.பி.ஜே.அப்துல்
கலாம் தலைமை தாங்கினார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.நாகமுத்து
முன்னிலை வகித்தார். விழாவில் ‘இறையன்பு ஆய்வுக்கோவை’ எனும் நூலினை நீதிபதி
எஸ்.நாகமுத்து வெளியிட, தொழிலதிபர் ‘ராம்ராஜ்’ கே.ஆர்.நாகராஜன்
பெற்றுக்கொண்டார். படிப்போரை மகானாக்கும்விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசியதாவது:- இந்திய
ஆட்சிப்பணியில் இருந்து கொண்டு தமிழுக்கும், தமிழ் இலக்கியத்துக்கும்,
மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், தன்னம்பிக்கையை அளிக்க கூடிய படைப்புகளை
இறையன்பு சர்வ சாதாரணமாக படைத்து இருக்கிறார் என்றால் அவருடைய
அறிவுத்திறன் அசாதாரணமாக விளங்குகிறது.இவ்வளவு படைப்புகளையும், தனது பணிக்காலத்தில் படைத்திருக்கிறார் என்றால் அதற்கு காரணம், அவர் படித்த புத்தகங்கள் தான். ‘அருமையான
புத்தகங்கள் கற்பனைத்திறனை ஊக்குவிக்கும்’, ‘கற்பனைத்திறன் படைப்பாற்றலை
உருவாக்கும்’, ‘படைப்பாற்றல் சிந்திக்கும் திறனை வளர்க்கும்’, ‘சிந்தனை
திறன் அறிவை வளர்க்கும்’, ‘அறிவு உன்னை மகானாக்கும், இறையன்புவின்
படைப்புகளும், அவருடைய புத்தகங்களும் படிப்போரை மகானாக்கும் என்பது
நிச்சயம்(அனைவரும் இதை திரும்பி சொன்னார்கள்) நல்ல புத்தகங்கள்,
அறிவூட்டும் புத்தகங்கள், இளைய சமுதாயத்தின் மனதை நல்ல வகையில் வழி நடத்த
உதவும் புத்தகங்கள் இறையன்புவிடம் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பல மடங்காக
வளர்ச்சியடைய வாழ்த்துக்கள். ‘இறையன்பு படைப்புலகம்’ அளித்த
புத்தகங்கள், மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் வாழ்வின் ஒவ்வொரு
பகுதியையும் எப்படி வடிவமைத்து கொள்வது, எப்படி சோதனைகளை சாதனைகளாக்குவது
எப்படி தோல்விகளை வெற்றிப்படிக்கட்டுகளாக மாற்றுவது என்று உத்திகளை
கொடுக்கிறது.வீடுகளில் நூலகம் அமைக்க...கடந்த 10 ஆண்டுகளில்,
கிட்டத்தட்ட 12 மில்லியன்(1.2 கோடி) இளைஞர்களை சந்தித்து உரையாடி
இருக்கிறேன். இந்த பூமிக்கு கீழே, மேலே, வானத்தில் இருக்கக்கூடிய எவ்வித
வளத்தைக்காட்டிலும், சக்தியை காட்டிலும், இளைஞர்களின் எழுச்சி
உண்டாக்கப்பட்ட மனம் மிகவும் சக்திவாய்ந்தது ஆகும். எனவே புத்தகங்களை
படைக்கும் படைப்பாளிகள், எழுத்தாளர்கள் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை
அளிக்ககூடிய படைப்புகளை கற்பனைத்திறத்தோடும், காட்சி அமைப்புகளோடும் படைக்க
வேண்டும்.பெற்றோர்களும், ஆசியர்களும் தங்கள் குழந்தைகள் நல்ல
செயல்களையோ, சாதனைகளையோ செய்தார்கள் என்றால் அவர்களுக்கு நீங்கள்
பரிசளிப்பது புத்தகங்களாகத்தான் இருக்க வேண்டும்.இவ்வாறு அப்துல் கலாம் பேசினார். 2 சிறந்த மனிதர்கள் யார்?விழாவில்
நீதிபதி எஸ். நாகமுத்து பேசும்போது, தமிழ்நாட்டில் உள்ள கல்லூரி
மாணவர்களிடையே உங்களை மிகவும் கவர்ந்த முதல் இரண்டு மனிதர்கள் யார்? என்று
கருத்துகணிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. இதில் 100 சதவீத மாணவர்கள் அப்துல்
கலாமை முன்னோடியாக பின்பற்றி செயல்படுவதாக அறிவித்து இருக்கிறார்கள். 2-வது
இடத்தை இறையன்பு ஐ.ஏ.எஸ்.வுக்கு வழங்கி இருக்கிறார்கள். காலத்தால் அழிக்க
முடியாத இதிகாச நூல்களையும் இறையன்பு படைக்க வேண்டும்’ என்றார். பிரபல
எழுத்தாளர் ராமகிருஷ்ணன் திறனாய்வு உரையாற்றி பேசும்போது, ‘ இறையன்பு
ஐ.ஏ.எஸ். சிறந்த ஆட்சியாளர், சிந்தனையாளர், பண்பாளர், நல்லமனிதர்,
எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், அத்தனையும் ஒருங்கே பெற்ற பன்முக தன்மை
உடையவர் ஆவார். அவரை உந்துசக்தியாகயும், வழிகாட்டியாகவும் கொண்டு தான் பலர்
ஐ.ஏ.எஸ்.ஆகிறார்கள்.’ என்றார். முக்கிய பிரமுகர்கள்நிகழ்ச்சியில்,
மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி துணை தலைவர் எஸ்.ராஜகோபால்
வரவேற்புரை ஆற்றினார். டாக்டர் எம்.ஜி.ஆர்.ஜானகி மகளிர் கல்லூரி தாளாளர்
லதா ராஜேந்திரன் விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களை பூங்கொத்து
வழங்கி கவுரவித்தார். இறையன்பு ஐ.ஏ.எஸ்., சிறப்பு விருந்தினர்கள்
அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கி, நன்றி உரையாற்றினார். அப்போது அவர்
பேசும்போது, ‘ நான் யாருக்கும் நன்றி சொல்ல மாட்டேன். இந்த நிகழ்வை எனது
வாழ்நாள் முழுவதும் எண்ணிப்பார்க்கும் வகையில் எனது இதயத்தில் பூட்டி
வைத்துகொள்வேன்.’ என்றார்.விழாவில், இந்தியன் கம்யூனிஸ்டு கட்சியின்
தேசிய செயற்குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு, காந்திய மக்கள் இயக்க தலைவர்
தமிழருவி மணியன், நீதிபதி பாட்சா, சமய சொற்பொழிவாளர் சுகி சிவம், மூத்த
பத்திரிகையாளர் மாலன் உள்பட தமிழ் அறிஞர்கள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள்,
கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்.மதுரையில் நிறைவு விழாஇறையன்பு
படைப்புலகத்தின் தேசிய அளவிலான கருத்தரங்கத்தின் நிறைவு விழா, மதுரை
பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் உள்ள மூர்த்தி நாயுடு-
ஆண்டாளம்மாள் கருத்தரங்க கூடத்தில், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல
அடிகளார் தலைமையில் இன்று(சனிக்கிழமை) நடக்கிறது. விழாவில், வெ.இறையன்பு
ஐ.ஏ.எஸ்., ஏற்புரை நிகழ்த்துகிறார். 10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
USEFUL TIPS
தமிழுக்கும், இளைஞர்களுக்கும் தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய வகையில் ‘இறையன்பு ஐ.ஏ.எஸ்., எழுதிய புத்தகங்கள் படிப்போரை மகானாக்கும்’ முன்னாள் ஜனாதிபதி-அப்துல் கலாம் புகழாரம்:
தமிழுக்கும், இளைஞர்களுக்கும் தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய வகையில் ‘இறையன்பு ஐ.ஏ.எஸ்., எழுதிய புத்தகங்கள் படிப்போரை மகானாக்கும்’ முன்னாள் ஜனாதிபதி-அப்துல் கலாம் புகழாரம்:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |







