பெங்களூரிலுள்ள ஜவகர்லால் நேரு அறிவியல் ஆராய்ச்சி
மையத்தில் வேதியியல் துறை சார்ந்த கோடைகால ஆராய்ச்சி பணிகளுக்கு இளங்கலை
வேதியியல் முதலாமாண்டு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: Felowship
ஆராய்ச்சி திட்டத்தின்: Project Oriented Chemical Education
கல்வித்தகுதி: வேதியியல் பாடத்தில் பி.எஸ்சி முதலாண்மாண்டு படித்துக் கொண்டிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை; நேர்முகத்தேர்வு மலம்
தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஏப்ரல் மாதம் முதல் வாரம்
நேர்முகத்தேர்வு நடைபெறும். பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்கள்
கோடைவிடுமுறை காலங்களில் 6 முதல் 8 வாரப் பயிற்சிக்கு அழைக்கப்படுவர்.
பயிற்சியின் போது வேதியியல் துறை சார்ந்த ஆராய்ச்சி பணியில் ஈடுபட
வேண்டும். மாதம் ரூ.6000 உதவித்தொகை வழங்கப்படும். தொடர்ந்து மூன்று வருட
கோடைகால விடுமுறையில் ஆராய்ச்சி பணியில் ஈடுபட வேண்டும். சிறப்பாக
பணிபுரிபவர்களுக்கு Diploma in Chemistry சான்றிதழ் தரப்படும். வேதியியல்
துறையில் எம்.எஸ்., பிஎச்.டி படிப்பில் சேர்ந்து மேற்படிப்பை தொடரலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.jncasr.ac.in/fe என்ற
இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து
அனுப்பவும். கூடுதல் விபரங்களை இணையதளத்தில் பெற்றுக் கொள்ளவும்.
பிப்.,17ம் தேதி முதல் பிப்.,24ம் தேதி வரை விண்ணப்பத்தை பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் சென்றடைய கடைசி
நாள் மார்ச் 03.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை The Co-ordinator. Fellowships
& Extension Programmes, Jawaharlal nehru Centre For Advanced
Scietific Research, Jakkur (PO), Bangalore - 560 064 என்ற முகவரிக்கு
அனுப்பலாம்.







