2011-12-ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் 2012-13, 2013-14-ம் ஆண்டுகளுக்கான பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்பட்டன.இதுவரை மூன்று பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், 2014-15-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.காலை 11 மணிக்கு தாக்கல்இதுகுறித்த அறிவிப்பை, சட்டசபை செயலாளர் அ.மு.பி. ஜமாலுதீன் வெளியிட்டார். அதில், தமிழ்நாடு சட்டசபையின் அடுத்த கூட்டத்தை 13-ந்தேதியன்று வியாழக்கிழமை காலை 11 மணிக்கு சபாநாயகர் கூட்டியுள்ளார். அப்போது 2014-15-ம் ஆண்டுக் கான நிதிநிலை அறிக்கை, சட்டசபைக்கு அளிக்கப்படும் என்று கூறியிருந்தார்.மேலும், 2013-14-ம் ஆண்டுக்கான இறுதி துணை பட்ஜெட்டை 20-ந்தேதியன்றும், 2014-15-ம் ஆண்டுக்கான முன்பண மானியக்கோரிக்கைகளை 21-ந்தேதியன்றும் சட்டசபையில் தாக்கல் செய்யவேண்டும் என்றும் தமிழக கவர்னர் உத்தரவிட்டுள்ளதாக சட்டசபை செயலகக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.கூட்டம் கூடும் நாட்கள்இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 30-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கி கடந்த 3-ந்தேதி நிறைவடைந்தது. இந்த ஆண்டின் இரண்டாம் கூட்டத்தொடர், பட்ஜெட் கூட்டத்தொடராக நாளை தொடங்குகிறது.பட்ஜெட் உரையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாசிப்பார். அதைத் தொடர்ந்து அன்றைய சட்டசபை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும். பின்னர் சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் கூட்டப்படும். பட்ஜெட் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும் என்பது உட்பட சில முடிவுகள் அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும்.தேர்தலுக்குப் பிறகுபொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், அதை அனைவரும் படித்துப் பார்ப்பதற்கு வசதியாக ஓரிரு நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். அதன் பிறகு பட்ஜெட் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதிப்பார்கள். அதற்கு நிதி அமைச்சர் பதிலளிப்பார்.இந்தியாவில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்புகள் பிப்ரவரி இறுதியில் வெளியாகலாம் என்று தெரிகிறது. எனவே இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின், துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம், வாக்கெடுப்பு போன்ற நிகழ்ச்சிகள், பாராளுமன்றத் தேர்தலுக்கு பிறகு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.வரிகள் இருக்குமா?மேலும், தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட்டாக இருப்பதால், மக்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த அறிவிப்பு அதிகம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த ஆண்டைப் போல புதிய வரிகள் விதிக்கப்படாத, வரிகள் கூட்டப்படாத பட்ஜெட்டாக இருக் கும் என்று கூறப்படுகிறது.தமிழகத்தில் ஓடும் நதிகளை இணைக்கும் மெகா திட்டம் குறித்த அறிவிப்பு, பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலுக்காக தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் கூட்டணி விவகாரங்களும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிரொலிக்கும். எனவே, காரசாரமான அரசியல் கருத்து பறிமாற்றத்தை இந்தக் கூட்டத்தொடரில் கேட்கமுடியும்.