பாலிடெக்னிக் கல்லூரிகள், அகில இந்திய தொழில்நுட்ப
கவுன்சிலின் (ஏஐசிடிஇ) அனுமதி பெறுவதற்கான கால அவகாசம் இம்மாத இறுதி வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.
பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் முதுநிலை பட்டயப் படிப்புகளை நடத்தும்
நிறுவனங்களை புதிதாகத் தொடங்க ஏ.ஐ.சி.டி.இ.-யின் அனுமதி பெறுவது அவசியம்.
இதுபோல் ஏற்கெனவே இயங்கி வரும் கல்லூரிகள் ஏ.ஐ.சி.டி.இ.-யிடம் தொடர்ந்த நடத்த அனுமதி நீட்டிப்பை பெற வேண்டும்.
வரும் 2014-15 ஆம் கல்வியாண்டில் இந்த அனுமதி மற்றும் அனுமதி
நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க கடந்த 15-ஆம் தேதி கடைசித் தேதி என முன்னர்
அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பல்வேறு கல்லூரிகள் மற்றும் அமைப்புகளின் கோரிக்கையை
ஏற்று இந்த கால அவகாசத்தை ஏ.ஐ.சி.டி.இ. இப்போது நீட்டித்துள்ளது. அதன்படி,
பாலிடெக்னிக் கல்லூரிகள் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.








