Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
10TH 12TH EXAM NEWS
பிளஸ்-2 தேர்வு தொடங்கியது 8¾ லட்சம் மாணவ - மாணவிகள் தேர்வு எழுதினார்கள் காப்பி அடிப்பதை தடுக்க பறக்கும்படையினர் திடீர் ஆய்வு :
பிளஸ்-2 தேர்வு தொடங்கியது 8¾ லட்சம் மாணவ - மாணவிகள் தேர்வு எழுதினார்கள் காப்பி அடிப்பதை தடுக்க பறக்கும்படையினர் திடீர் ஆய்வு :
பிளஸ்-2 தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வை 8 லட்சத்து 79 ஆயிரத்து 500 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். பிளஸ்-2 தேர்வுதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு நேற்று தமிழ் முதல் தாளுடன் தொடங்கியது. முதல்
நாள் தேர்வு என்பதால் மாணவ-மாணவிகள் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு
கடவுளை வணங்கிவிட்டு பெற்றோரையும் வணங்கிவிட்டு பள்ளிகளுக்கு தேர்வு எழுத
சென்றனர்.
சில பள்ளிகளின் முன்பு உள்ள பிள்ளையார் கோவிலில் மாணவ- மாணவிகள்
வழிபாடு செய்துவிட்டு தேர்வு எழுதச்சென்றனர். சில கிறிஸ்தவ பள்ளிகளில் மாதா
சிலை முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி மாணவிகள் வணங்கினார்கள். பள்ளிக்கு சென்றதும் அனைத்து மாணவர்களுக்கும் தலைமை ஆசிரியர்கள் தலைமையில் பிரார்த்தனை நடைபெற்றது. சில மாணவர்கள் ஆசிரியர்களின் கால்களில் விழுந்து வணங்கி ஆசி பெற்றனர்.காலணிகள், பெல்ட்டுக்கு அனுமதி இல்லைதேர்வு அறைக்குள் பேனா பென்சில், ரப்பர், ஸ்கேல் ஆகியவை மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. தேர்வு
மையங்களில் பென்சில், பேனா வைக்கக்கூடிய பளிச் என்று தெரியக்கூடிய பவுச்
அனுமதிக்கப்பட்டது. சில இடங்களில் அனுமதிக்கப்படவில்லை. சில தனியார்
பள்ளிகளில் பள்ளியில் இருந்தே எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான பவுச்
வாங்கிக் கொடுத்து தேர்வு எழுத வைத்தனர். தேர்வு அறைக்குள்
காலணிகளையும் அணிந்து செல்ல அனுமதிக்கவில்லை. பெல்ட் அணிந்திருந்த
மாணவர்களும் பெல்ட்டை கழற்றி தேர்வு அறைக்கு வெளியே வைத்துவிட்டு தேர்வு
எழுதச்சென்றனர். துண்டு பேப்பர் வைத்து காப்பி அடித்துவிடுவார்களோ என்ற
எண்ணத்தில்தான் இப்படி ஏற்பாடு செய்யப்பட்டதாக தேர்வு நடத்திய அதிகாரிகள்
தெரிவித்தனர். பறக்கும்படை அதிகாரிகள் கண்காணிப்புதேர்வு
மையங்களை 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தது. அந்த
படையினர் தேர்வு மையங்களுக்குச் சென்று திடீர் ஆய்வு செய்தனர். பள்ளிக்கல்வித்துறை
அமைச்சர் கே.சி.வீரமணி திருப்பத்தூர், ஜோலார் பேட்டை ஆகிய இடங்களில்
பல்வேறு தேர்வு மையங்களை பார்வையிட்டார். பள்ளிக்கல்வித்துறை முதன்மை
செயலாளர் த.சபீதா சென்னையில் கீழ்ப்பாக்கம் பெயின் மெட்ரிகுலேசன்
மேல்நிலைப்பள்ளி, காரைக்குடி அழகப்பா செட்டியார் மெட்ரிகுலேசன்
மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல தேர்வு மையங்களுக்கு சென்று பார்வையிட்டார். எழும்பூர்
மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் சுந்தரவல்லி சென்று ஆய்வு
செய்தார். அதுபோல பல மாவட்டங்களில் கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள்
தேர்வு மையத்தை பார்வையிட்டனர். அரசு தேர்வுகள் இயக்குனர்
கு.தேவராஜன் சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி.மேல்நிலைப்பள்ளி
உள்ளிட்ட பல பள்ளிகளுக்கு சென்று மாணவர்கள் தேர்வு எழுதியதை ஆய்வு
செய்தார். பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் நேற்று
காஞ்சீபுரம் பச்சையப்பன் பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகளுக்கு சென்று
மாணவர்கள் தேர்வு எழுதுவதை கண்காணித்தார். அதுபோல இயக்குனர்கள்
சங்கர், இளங்கோவன், கண்ணப்பன், பிச்சை மற்றும், ராஜ ராஜேஸ்வரி, ராமராஜன்,
நரேஷ், உமா, உஷா, பழனிச்சாமி உள்ளிட்ட இணை இயக்குனர்கள், சென்னை முதன்மை
கல்வி அதிகாரி ராஜேந்திரன் உள்ளிட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட
கல்வி அதிகாரிகள் மற்றும் வருவாய் அதிகாரிகள் தேர்வு மையங்களுக்கு சென்று
காப்பி அடிக்கிறார்களா என்று ஆய்வு செய்தனர். புதிய முறையால் ஆள்மாறாட்டம் செய்யமுடியாதுநேற்று நடைபெற்ற தேர்வு குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- தமிழ்நாடு
முழுவதும் எந்த வித முறைகேடும் இன்றி சுமூகமாக தமிழ் முதல் தாள் தேர்வு
நடைபெற்றது. ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவது சிரமம். காரணம் தேர்வு
எழுதுபவரின் உருவமும் விடைத்தாளின் முகப்பு சீட்டில் உள்ள புகைப்படமும்
ஒன்றாக இருக்கவேண்டும். அதனால் யாரும் எளிதில் ஆள்மாறாட்டம் செய்ய இயலாது.
அப்படியே யாரும் ஆள்மாறாட்டம் செய்தால் அவர்கள் நிரந்தரமாக தேர்வு எழுத
தடைவிதிக்கப்படும். எனவே யாரும் காப்பி அடித்து வாழ்க்கையை தொலைத்து
விடாதீர்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.8¾ லட்சம் பேர் பிளஸ்-2
தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியில் 6ஆயிரத்து 4 மேல்நிலைப்பள்ளிகளில்
இருந்து 8 லட்சத்து 26 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள். மேலும்
தனித்தேர்வர்கள் 53 ஆயிரத்து 500 பேர் எழுதினார்கள். மொத்தம் 2 ஆயிரத்து
242 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு மையங்களில்
போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பார்வையற்ற மாணவர்கள் சொல்வதை எழுத
தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். அந்த ஆசிரியர் கேள்வியை
வாசித்து பார்வையற்ற மாணவரிடம் கூறுவார். அதற்கு அவர் கொடுக்கும் பதிலை
அந்த ஆசிரியர் எழுதுவார். இவர்களுக்கும், காது கேட்கும்திறன்
குறைந்தவர்களுக்கும் வழக்கத்தைவிட கூடுதலாக ஒருமணிநேரம் தேர்வு எழுத
ஒதுக்கப்பட்டது. தேர்வுக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் யாரும் தேர்வு
மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவர்கள் கூறியதாவது:-தேர்வு எளிதாக இருந்ததுஇந்த
வருடம் விடைத்தாளில் முகப்பு சீட்டில் மாணவர்கள் பதிவு எண்
அச்சடிக்கப்பட்டிருந்ததால் நாங்கள் முதல் பக்கத்தில் அதை சரிபார்த்துவிட்டு
எங்கள் புகைப்படத்திற்கு கீழ் கையொப்பம் மட்டும்தான் இட்டோம். பின்னர்
கேள்வித்தாளை படித்து பார்த்துவிட்டு விடை எழுதத்தொடங்கினோம். தமிழ்
முதல் தாள் தேர்வு எளிதாக இருந்தது. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள்
இந்த வருடம் தமிழ்நாடு முழுவதும் பொதுவான கேள்வித்தாள்தான். அதனால் தேர்வு
மிக எளிதாக இருந்தது. புத்தகத்தில் இருந்துதான் அனைத்துகேள்விகளும்
வந்திருந்தன. பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து எந்த ஒரு கேள்வியும்
கேட்கப்படவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.பிளஸ்-2 தமிழ் 2-ம் தாள் தேர்வு 5-ந்தேதி நடக்கிறது. பிளஸ்-2 தேர்வு 25-ந்தேதி முடிவடைகிறது.எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு 26-ந்தேதி தொடங்குகிறது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








