Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
10TH 12TH EXAM NEWS
பிளஸ் 2 தேர்வு : கணக்கு, விலங்கியல் கேள்வித்தாள் குழப்பத்தால் சென்டம் குறையும்:
பிளஸ் 2 தேர்வு : கணக்கு, விலங்கியல் கேள்வித்தாள் குழப்பத்தால் சென்டம் குறையும்:
நேற்று நடந்த கணக்கு பாடத் தேர்வின் கேள்வித்தாள் 22 பக்கங்கள் இருந்தன.
ஒரு மதிப்பெண் கேள்வியில் இடம் பெற்ற கேள்விகள் அனைத்தும் புத்தகத்தில்
இருக்கிறபடியே கேட்கப்பட்டாலும் 4 வது கேள்வியை மாற்றி கேட்டுள்ளனர்.
இதனால் மாணவர்கள் அந்த கேள்விக்கு விடை எழுதுவதில் குழம்பிப்போனார்கள்.
அடுத்ததாக 47வது கேள்வி, புத்தகத்தில் இருப்பது போல் கேட்கப்படவில்லை.
அதற்கு விடை எழுதினால் புத்தகத்தில் இருப்பது போல விடை வராது. அதே
கேள்வியில் இடம் பெற்ற குறியீடுகளில் ‘எக்ஸ்’ மற்றும் ‘ஈ’ குறியீடுகள்
மாறியுள்ளன. ‘ஈ’ என்ற குறியீடு கீழே இறக்கி அச்சிட்டு இருக்க வேண்டும்.
மேலே அச்சிட்டுள்ளனர். இதனால் விடை எப்படி எழுதுவது என்று புரியாமல்
மாணவர்கள் குழம்பினர். 55வது கேள்வி பெரும்பாலும் வெளிப்படையாக
கேட்கப்படும். ஆனால் இந்த முறை மூன்று மூன்று மதிப்பெண் வரும் வகையில்
பிரித்து கேட்கப்பட்டுள்ளது . அதேபோல 55 பி கேள்வியும் இடம்
பெற்றுள்ளது. கேள்வி எண் 70பி கட்டாய கேள்வியாக கேட்கப்பட்டுள்ளது. இதற்கு
10 மதிப்பெண்கள். இதை இரண்டு பிரிவுகளாக பிரித்து கேட்டுள்ளனர். கேள்வியே
தவறு என்றும் மாணவர்கள் தெரிவித்தனர். இது தவிர கணக்கு கேள்வித்தாளில் பல
இடங்களில் நிறுத்தல் குறிகள், கமா, புள்ளி, கேள்விக்குறி ஆகியவை தவறாகவே
அச்சிட்டுள்ளனர்.
இது போன்ற குழப்பங்கள் நிறைய கணக்கு கேள்வித்தாளில் இடம் பெற்றுள்ளன.
இதனால் மாணவர்கள் விடை எழுதுவதில் குழப்பம் அடைந்தனர். பல மாணவர்கள் விடை
எழுதாமலேயே வந்துவிட்டனர். இதன்படி பார்த்தால் 29 மதிப்பெண்கள் மாணவர்கள்
இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆசிரியர்களை பொறுத்தவரை கணக்கு
கேள்வித்தாள் எளிதாக இருப்பதாக தெரிவித்தனர். இருப்பினும் சராசரி
மாணவர்களால் அதிக மதிப்பெண் பெற முடியாது என்றும் தெரிவிக்கின்றனர்.
இது தவிர விலங்கியல் கேள்வித்தாளும் கடினமாக இருந்ததாக மாணவர்கள்
தெரிவித்தனர். குறிப்பாக 1 மதிப்பெண் கேள்விகள் கடினமாகவே இருந்தன. 10
மதிப்பெண் கேள்விகளும் கடினமாக இருந்ததாக தெரிவித்தனர். ஆண்டுதோறும்
விலங்கியல் பாடத்தில் சென்டம் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஒற்றை
இலக்கத்திலேயே இருக்கும். இந்நிலையில் இந்த ஆண்டும் ஒற்றை இலக்கத்தில்
சென்டம் வரும் என்று எதிர்பார்க்கலாம்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








