தாய்மைக் கனவுகளை நினைவாக்கும் மகத்தான விஞ்ஞானம் : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


தாய்மைக் கனவுகளை நினைவாக்கும் மகத்தான விஞ்ஞானம் :

குடும்பம் என்பது குழந்தைகள் இருந்தால்தான் முழுமை அடைகிறது. குழந்தையின்மையினால் மனவருத்தம், திருமண வாழ்க்கையில் கசப்பு, கடினமான சொல்லை கேட்க வேண்டிய நிலைமை, திருமணங்கள் முறிவு அடைதல் ஆகிய பல இன்னல்கள் ஏற்படுகிறது. 1990இல் குழந்தையின்மை சிகிச்சை 10% வெற்றிகரமாக இருந்தது. ஆனால் இன்றைய நிலைமை மிகவும் வித்தியாசமானது.
விஞ்ஞானம் பல மடங்கு முன்னேறி இருக்கிறது. இன்றைக்கு குழந்தையின்மைக்கு என்ன காரணம் என்று கண்டுபிடித்து அந்த குறைக்கு தேவையான சிகிச்சையை செய்கிறார்கள். ஸ்கேனில் 3ஞி, 4ஞி பாப்லர் (இரத்த ஓட்டம் பார்ப்பது) ஆகியன நவீன வசதிகள் உள்ளன. இதனால் கர்ப்பபையில், சினைப்பையில், கருக்குழாயில் உள்ள குறைகளை கண்டுபிடித்து அதற்குரிய சிகிச்சையை அளிக்கலாம். ஸ்டெரோ சால்பின் ஜோக்ராம் (பிஹ்௳௴மீக்ஷீஷீ ஷிணீறீஜீலீவீஸீரீஷீரீக்ஷீணீனீ) என்னும் எக்ஸ்-ரே எடுத்து குழந்தை வளரும் இடத்தில் உள்ள குறைபாடுகள், கருக்குழாயில் உள்ள அடைப்புகள், நீர்கோர்த்தல் ஆகியவைகளை கண்டுபிடிக்கலாம். ஆண்களுக்கு கணினி மூலம் விந்து ஆராய்தல் என்னும் முறை மரபணுவில் உள்ள குறைபாடுகளையும் கண்டுபிடிக்கலாம். நுட்பமான முறையில் விந்தின் குறைகளை கண்டுபிடித்து அதற்கான சிசிச்சையை அளித்தால் வெற்றி அடையலாம். ஆண்கள் வயது அதிகரிக்கும் பட்சத்தில் இத்தகைய குறைபாடுகள் அதிகரிக்கிறது. மருந்துகள் மூலமும் லேப்ரோஸ் கோப்பிக் அறுவை சிகிச்சைகள் மூலமும் பெரும்பாலான குறைகளை நிவர்த்தி செய்யலாம். கர்ப்பப்பையிலும், சினைப்பையிலும், கருக்குழாயிலும் ஏற்படும் நார் கட்டிகள், நீர்கட்டிகள், இரத்தக் கட்டிகள், நீர் கோர்த்தல் போன்றவைகளை 3ஞி லேப்ரோஸ்கோபி, ஸ்ட்ரோஸ் கோப்பி மூலம் சிகிச்சையளித்து முழுமையாக குணப்படுத்தலாம். 3ஞி லேப்ரோஸ்கோபி முதல் முறையாக சென்னையில் பிரசாந்த் ஆராய்ச்சி மையத்தில் தான் உபயோகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் மிக நுட்பமாக அறுவை சிகிச்சை செய்வதால் இரத்தக் கசிவு குறைவாக உள்ளது. கட்டிகளை எடுத்த பின் தையல் போட்டு அதை நிலமைக்கு எடுத்து வருவதால், கர்ப்பம் அடையும் வாய்ப்பும் கர்ப்பத்தில் எந்த விதமான சிக்கல்களும் ஏற்படாமல் பாதுகாப்பதற்கும் உபயோகமாக இருக்கிறது. 3ஞி விஞ்ஞானத்தின் மகிமை இது என்று கூறலாம்.இவ்வாறு நவீன அறுவை சிகிச்சை முறைகளை கடைப்பிடிப்பதால் குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும் 90 சதவிகித பேருக்கு கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அளிக்க முடியும்.மீதியுள்ள 10% பெண்களுக்கு மிமி கருப்பையில் விந்து செலுத்துதல் அல்லது டெஸ்ட்டியூப் பேபி (மிக்ஷிதி/மிசிஷிமி) விந்தை முட்டையில் செலுத்துதல் முறை தேவைப்படுகிறது. மிமி ஆறுமுறை தோல்வி அடைந்தால் மிசிஷிமி முறைக்கு மாறுவது நல்ல பயனை அளிக்கும்.1990 ஆம் ஆண்டு ஐவிஎஃப் முறையில் 8-10% பெண்களுக் கர்ப்பமாகும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இன்றைய நவீன விஞ்ஞான முறைகளினால் 6085% வரை கர்ப்பமாகும் வாய்ப்பு உள்ளது. இது எப்படி சாத்தியமாகும். என்று நீங்கள் யோசிக்கலாம். நவீன கருவிகளையும், முறைகளையும் உபயோகிப்பதே இந்த மகத்தான வெற்றிக்கு காரணம்.மிக்ஷிதி லேப்பில் ஹ்யுமிடிக்ரிப் என்னும் கருவி முட்டையையும், கருவையும் நம் உடம்பில் இருக்கும் வெப்ப நிலையிலேயும், ஆக்சிஜென் போன்ற வாயுக்களையும் நம் உடம்பில் இருக்கும் நிலையிலேயும் வைக்க உதவுவதால் வெற்றி அடையும் வாய்ப்பு அதிகரிக்கிறது.இதை தவிர லேசர் கணிணி முறையை உபயோகிப்பதால் 38 வயது தாண்டியவர்களுக்கும் பலமுறை தோல்வி அடைந்தவர்களுக்கும் கர்ப்பமாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. 5வது நாள் கருவை (பிளாஸ்போசிஸ்ட்) கர்ப்பபையில் செலுத்துவதால் வெற்றி அடையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. வெற்றி அடையும் வாய்ப்பை அதிகரிக்க முட்டை, விந்து கர்ப்பப்பை இவை மூன்றும் சிறப்பாக அமைய வேண்டும். முட்டை வளர்ச்சியையும் அதன் தன்மையும் முதல் தரமாக ஆக்குவதற்கு சிறப்பு மருந்துகளும் யோகா, அக்குபஞ்சர், இசை ஆகியவையும் மிக உபயோகமாக உள்ளன. எல்லோருக்கும் எவ்வளவு வயதானாலும் அவர்களுடைய முட்டை தான் வேண்டும் என்று நினைப்பது சகஜம். இன்றைய மருந்துகளும் உபயோகிக்கும் முறையில் உள்ள முன்னேற்றங்களும் இதற்கு மிகவும் உதவுகிறது. ஐவிஎஃப் லைட் ப்ரோட்டாக்கால என்ற முறையை கடைபிடித்த பிறகு 42 வயது வரை உள்ள பெண்களுக்கு தன்னுடைய முட்டையை உபயோகித்து கரு உருவாக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. விந்தணு தரத்தை அதிகரிக்க மருந்துகளும் லேப்ரோஸ்கோப்பிக் அறுவை சிகிச்சையும் உள்ளன. இதை தவிர மிகவும் அதி நவீன (ஐ.எம்.எஸ்.ஐ) முறையினால் விந்தணுவை கணினி (கம்பியூட்டர் ஜெனரேட்டட் இமேஜ்) மூலமாக 7000 மடங்கு பெரிதாக பார்த்து மிகவும் சிறப்பான விந்தை தேர்வு செய்யலாம்.சிறப்பான கருவை உருவாக்கி அதில் மிகவும் சிறப்பான கருவை தேர்ந்தெடுப்பது எப்படி? எம்ப்ரியோஸ்கோப் என்பது மிகவும் அதிநவீன கருவி, இந்த இன்குபேட்டரில் கருவை பாதுகாப்பாக வைக்கிறோம். இதில் கேமரா உள்ளதால் கருவின் வளர்ச்சியை ஒவ்வொரு நிமிடமும் பதிவு செய்ய உதவுகிறது. இதனால் வளர்ச்சியில் குறை இருந்தால் அதை கண்டுபிடித்து கருப்பையில் செலுத்துமுன் சிறந்த கருவை தேர்ந்தெடுக்க முடிகிறது. இதனால் கர்ப்பமாகும் வாய்ப்பை 10-12% அதிகமாக்கலாம்.கர்ப்பப்பையின் உட்புற சுவரின் ஒட்டும் தன்மையை அதிகரிப்பதற்கு எம்ப்ரியோக்ளு எனும் பசை உள்ளது. இதை தவிர ஸ்டெரோஸ்கோப்பி மூலம் கர்பப்பையின் உள் பகுதியை நோக்கி ஸ்கிராட்ச் டெஸ்ட் மூலம் சிறு அளவில் சதையை சுரண்டி எடுப்பதால் வளர்ச்சிக் காரணிகள் அதிகரித்து கரு கருப்பையில் ஒட்டி வளருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. என்பதை அனுபவத்தால் கண்டுபிடித்துள்ளோம்.இவ்வாறு விந்து, கரு, கருப்பை ஆகியவைகளின் ஆரோக்கியம் நவீன சிகிச்சை முறைகளாலும் நவீன சாதனங்களாலும் சிறப்பாக்கப்படுவதால் கர்ப்பமாகும் வாய்ப்பு 10-20% உயர்கிறது. கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு 10% குறைகிறது.இந்த எம்ப்ரிய«£ஸ்கோப் என்னும் கருவி உலகிலேயே நம் மருத்துவ மையத்தை சேர்த்து மொத்தம் 125 மையங்களில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.பெண்களுக்கு இந்த மகளிர் தின அறிவுரை என்னவென்றால் திருமணம் ஆன ஒரு வருடத்திற்குள் கரு உருவாகவில்லையென்றால் மருத்துவரை அணுக வேண்டும். முக்கியமாக மாதவிடாய் தாமதமாக இருந்தாலும், மிகவும் வலியோடு இருந்தாலும் தாம்பத்தியத்தில் சிக்கல் இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகவும், சிகிச்சை ஆரம்பித்து விட்டால் அடுத்தடுத்து இடைவிடாமல் சிகிச்சை எடுத்துக் கொள்ளவும். முக்கியமாக 35 வயதிற்கு மேற்ப்பட்டவர்கள் விரைவாக சிகிச்சை தொடங்குவது நல்லது.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H