Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
மனிதனுக்குள் இருக்கும் மூன்று குணங்கள்-பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்:
உலகில்
தோன்றிய மகான்கள் பலரும் மக்கள் பயன்பெறும் வகையில் பல நீதிக்கதைகளையும்,
வழிகாட்டும் கதைகளையும் கூறிச் சென்றுள்ளனர். அதில் ராமகிருஷ்ண பரமஹம்சரின்
அர்த்தம் பொதிந்த, ஆழமான கருத்துக்கள் அடங்கிய கதைகள் என்றும் மக்களை
நல்வழிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பவை. அவற்றில் ஒன்றை இங்கு
பார்க்கலாம்.
அடர்ந்த காட்டின் வழியாக செல்வந்தன் ஒருவன் சென்று கொண்டிருந்தான்.
அவனிடம் நிறைய விலைமதிப்பற்ற பொருட்கள் இருந்தன. காட்டிற்குள் இருந்த
மூன்று திருடர்கள், திடீரென செல்வந்தனை வழிமறித்து அவனிடம் இருந்த
பொருட்கள் அனைத்தையும் பறித்துக் கொண்டனர்.
மூன்று பேர்களில் ஒருவன், ‘இவனை உயிருடன் விட்டோம் என்றால், நம்மைப்
பற்றி நாட்டுக்குள் போய் கூறிவிடுவான். பின்னர் மன்னனின் பெரும் படைகள்
வந்து நம்மை பிடித்துச் சென்று விடுவார்கள்’ என்று கூறி செல்வந்தனை
கொல்வதற்காக கத்தியை ஓங்கினான். அவனை மற்றொரு திருடன் தடுத்து
நிறுத்தினான். செல்வந்தனை கொலை செய்வதில் அந்தத் திருடனுக்கு உடன்பாடு
இல்லை. அதனால்தான் தடுத்து நிறுத்தினான்.
எதற்காக தடுத்தாய் என்று முதலாவது திருடன் கேட்டதற்கு, ‘இவனைக்
கொல்வதால் நமக்கு என்ன பயன் இருக்கிறது?. கொலைப் பழிதான் வந்து சேரும்.
எனவே இவனது கை, கால்களைக் கட்டி இங்கேயே போட்டு விட்டு நாம் நம் வேலையைக்
கவனிக்கச் செல்வோம்’ என்று கூறினான். அதன்படியே மூவரும் சேர்ந்து
செல்வந்தனை அங்கிருந்த பெரிய மரத்தில் கயிற்றால் கட்டிப் போட்டு விட்டு
அங்கிருந்து அகன்றனர். செல்வந்தன் தன் நிலையை எண்ணி மனம் வருந்தியபடி
புலம்பிக்கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் மூன்றாவது திருடன் அங்கு வந்தான். அவன் செல்வந்தனிடம்,
‘உன்னைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. கொஞ்சம் பொறுமையாக இரு, உன்னுடைய
கட்டுக்களை அவிழ்த்து விடுகிறேன்’ என்று கூறியபடி, செல்வந்தனை
விடுவித்தான். மேலும், ‘இந்தக் காட்டில் இருந்து உன்னால் வெளியே செல்ல
முடியாது. நான் உன்னோடு துணைக்கு வந்து வழிகாட்டுகிறேன்’ என்று கூறி,
செல்வந்தனை சரியான பாதையில் அழைத்துச் சென்றான். பின்னர் காட்டில்
வெளிப்பகுதிக்கு வந்ததும் ஒரு பாதையைக் காட்டி, ‘இந்த வழியாக சென்றால் நீ
உன் இருப்பிடம் சென்று விடலாம்’ என்று வழிகாட்டினான்.
தன் மீது இவ்வளவு கருணை காட்டிய அந்த திருடனிடம் அன்பு கொண்ட
செல்வந்தன், தன் வீடு அருகில்தான் இருப்பதாகவும், உடன் வந்து உணவருந்த
வேண்டும் என்று அழைத்தான். ஆனால் திருடன், ‘உன் அன்பை மதிக்கிறேன். ஆனால்
என்னால் வர இயலாத சூழ்நிலை. அதுவும் தவிர நான் ஊருக்குள் வந்தால் காவலர்கள்
என்னை கைது செய்து விடுவார்கள்’ என்று கூறியபடி காட்டிற்குள் சென்று
மறைந்தான். இந்த கதைக்குள் பெரும் அர்த்தம் பொதிந்துள்ளது. மேலோட்டமாகப்
பார்த்தால் அது தெரியாது.
மனித வாழ்க்கை என்பது அடர்ந்த காடு போன்றது. அந்தக் காட்டில் சத்துவ
குணம், ரஜோ குணம், தமோ குணம் என்ற மூன்று திருடர்கள் இருக்கிறார்கள்.
காட்டு வழியில் செல்லும் செல்வந்தன் ஜீவாத்மாவாகும். அவனிடம் ஆத்ம ஞானம்
என்னும் பெரிய செல்வம் இருக்கிறது. அதை மூன்று திருடர்களாகிய மூன்று
குணங்களும் பறித்துக் கொள்கின்றன.
தமோ குணம் என்னும் திருடன், செல்வந்தனாகிய ஜீவாத்மாவை அழித்துவிடப்
பார்க்கிறது. ரஜோ குணம் என்னும் இரண்டாவது திருடன் அவனை உலக வாழ்க்கையில்
பிணைக்கிறது. பந்தங்கள் என்னும் சங்கிலியால் கட்டப்பட்டு, இறைவனும்
திருடனும் நமக்குள்ளேயே இருக்கிறார்கள். ரஜோ, தமோ குணங்களின் கொடுமையான
உடும்புப் பிடியில் இருந்து சத்துவ குணம் காப்பாற்றுகிறது. தமோ குணத்தின்
இயல்பான காமம், குரோதம் போன்ற கீழ்நிலையில் இருந்து நாம் சத்துவ குணத்தால்
காப்பாற்றப்படுகிறோம்.
சத்துவ குணத்தை சரணடையும்போது, உலக ஆசைகளாகிய பந்தங்களில் இருந்தும்,
மாயையில் இருந்தும் அது விடுவிக்கிறது. அவ்வாறு விடுவித்து கரை சேர்க்கும்
வல்லமை சத்துவ குணத்திற்கு உண்டு. சத்துவ குணமும் ஒரு திருடன் தான். அது
நம்மை இறைவனிடம் கொண்டுபோய் சேர்க்காது. ஆனால் இறைவனை அடைய வேண்டிய வழியை
காட்டும். பற்றில்லாத நிலையில் உலக நலனுக்காக செய்யப்படும் கர்மம், தயை,
நேர்மை, பக்தி போன்றவற்றைத் தோற்றுவிப்பது சத்துவ குணமாகும். மூன்று
குணங்களையும் கடந்தால் இருப்பது பரபிரம்மம் என்னும் அழகான மாளிகை. மனிதனின்
உண்மை இருப்பிடம் அதுவே.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








