Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
மலேசிய விமானம் கடத்தப்பட்டுள்ளது : விசாரணையின் முடிவில் மலேசியா அறிவிப்பு:
கடந்த வாரம் சனிக்கிழமை வானத்தில் பறந்து கொண்டிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் காணாமல் போனது குறித்து விசாரணை நடத்திய மலேசிய அரசு, விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று அறிவித்துள்ளது.
விமானத்தில் இருந்து விமான கட்டுப்பாட்டு அறைக்கு வரும் சமிக்ஞைகள் தானாக செயலிழக்கவில்லை. அது மனிதர்களால் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனை வைத்துப் பார்க்கும் போது, விமானம் கடத்தப்பட்டிருப்பதாக மலேசிய அரசு அறிவித்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும், கடத்தியவர்கள் யார் என்றும், எதற்காக விமானம் கடத்தப்பட்டது என்றும் இதுவரை தெரியவரவில்லை என்றும் கூறப்படுகிறது.
காணாமல் போன விமானத்தில் 5 இந்தியர்கள் உட்பட 239 பேர் இருந்தனர். மலேசிய விமானத்தை அனுபவம் வாய்ந்த ஒருவர் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து கடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களும் அணைத்து வைக்கப்பட்டிருப்பது, விமான ஓட்டியின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் காணாமல் போனதில், விமானத்தை யாரையேனும் கடத்தியிருக்கலாம் என்று தெரிய வந்திருப்பதாகவும், விமானத்தின் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூரில் இன்று மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, காணாமல் போன விமானத்தைத் தேடும் பணியில் 14 நாடுகள் ஈடுபட்டுள்ளன. கடற்பரப்புகளில் காணாமல் போன விமானத்தை, 42 கப்பல்கள், 39 விமானங்கள் தேடி வருகின்றன.
விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டு வரும் நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
மேலும், கப்பல் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்த தென் சீன கடல் பகுதியில் முதலில் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் விமானம் கிடைக்காததால், அந்தமான் வரை தேடுதல் பரப்பை விரிவுபடுத்தியுள்ளோம்.
இடைவிடாமல் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்களை நினைத்து கவலை அடைகிறோம். அவர்கள் மீது அதிக அக்கறை கொள்கிறோம் என்றார்.
விமானத்தின் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதை அடிப்படையாக வைத்தே, விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








