பர்த்வான் பல்கலைக்கழகத்தில், வரும் கல்வியாண்டு
முதல் தொலைதூரக் கல்வி முறையில் பி.எட்., படிப்பு துவங்க உள்ளதாக
பல்கலைக்கழக தலைவர் ஸ்மிரிட் குமார் சர்கார் தெரிவித்துள்ளார்.
இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அங்கீகாரம் பெற்ற
பல்கலைக்கழகத்தில் இளங்கலையில் 50 சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்க
வேண்டும்.
மேற்கு வங்க மாநிலத்தில் முதன் முறையாக இந்த படிப்பு தொலைநிலை வாயிலாக
வழங்கப்படுகிறது. இப்படிப்பு ஜூலை மாதத்தில் தொடங்கவுள்ளது என்று அவர்
தெரித்துள்ளார்.
இந்த பல்கலை தேசிய கல்வி கவுன்சில் அனுமதி கிடைத்துள்ளது. அடுத்த மாதம்
முதல் சேர்க்கை செயல்முறை துவங்கும். கலை மற்றும் அறிவியல், வர்த்தகம் ஆகிய
பாடப்பிரிவுக்கு கல்வி கட்டணமாக ரூ.25,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.








