மார்ச் 2014 இடை நிலைப் பள்ளி விடுப்பு சான்றிதழ்
பொதுத்தேர்வுக்கு தேர்வு துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் ஆன்லைனில்
விண்ணப்பிக்க தவறி தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள்
சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் ஆன்லைனில் இன்றும், நாளையும்
விண்ணப்பிக்கலாம்.
தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க முத்தியால்
பேட்டை சாலைத்தெருவில் உள்ள ஸ்ரீ அரவிந்தர் ஆங்கில மேல்நிலைப்பள்ளியில்
அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு மையத்தில் இன்று (14ம் தேதி) மற்றும்
நாளையும் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
பள்ளிக்கல்வி
துறை அரசாணைப்படி செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டவர்கள்
மட்டுமே கருத்தியல் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். ஏற்கனவே
நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் அறிவியல் பாடத்திற்கான செய்முறை பயிற்சி
வகுப்பிற்கு விண்ணப்பித்து செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு
ஆனால் கருத்தியல் தேர் வுக்கு விண்ணப்பிக்காமல் விடுபட்டுள்ள
தனித்தேர்வர்கள் தற்போது கருத்தி யல் தேர்வுக்கு சிறப்பு அனு மதி
திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
மேற்படி
தேர்வர்கள் செய்முறை வகுப்புகள் நடைபெற்ற சம்பந்தப்பட்ட பள்ளியின்
தலைமையாசிரியர் அல்லது மாவட்ட கல்வி அலுவலரிடமிருந்து செய்முறை பயிற்சி
வகுப்புகளில் கலந்து கொண்டதற்கான உரிய ஆதாரங்களை பெற்று கருத்தியல் தேர்வு
விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
செய்முறை பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாதவர்கள் கருத்தியல் தேர் விற்கு இச்சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பிக்க இயலாது.
புதிய
பாடத்திட்டத்தில் தேர்வெழுதி தோல்வியுற்றவர்கள் சிறப்பு அனு மதி
திட்டத்தில் தோல்வியுற்ற பாடங்கில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். பழைய
பாடத்திட்டத்தில் அறிவியல் பாடத்தை தவிர ஏனைய பாடங்களில்
தோல்வியுற்றிருப்பின் தோல்வியுற்ற பாடங்களை மட்டும் புதிய பாடத்திட்டத்தில்
தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். பழைய பாடத்திட்டத்தில் அறிவி யல் பாடத்தில்
தோல்வியுற்ற தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பிற்கு பதிவு
செய்து உரிய பயிற்சிகள் பெற்றிருப்பின் அவர்களும் அறிவியல் பாடத்தேர்வை
சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
தனித்தேர்வர்கள்
தேர்வு கட்டணமாக ரூ.125 மற்றும் கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.500
மற்றும் ஆன் லைன் பதிவு கட்டண மாக ரூ.50 உட்பட மொத்தம் ரூ.675ஐ
ஒருங்கிணைப்பு மையங்களில் பணமாக மட் டுமே செலுத்த வேண்டும். ஏற்கனவே
எஸ்எஸ்எல்சி தேர்வெழுதி தோல்வியுற்றவர்கள், தோல்வியுற்ற மதிப்பெண்
சான்றிதழ்க ளின் சான்றொப்பமிட்ட நகல்களை சமர்ப்பிக்க வேண்டும். அறிவியல்
பாட செய்முறை வகுப்பில் கலந்து கொண்டதற்கான தலைமையாசிரியரிட மிருந்து
பெறப்பட்ட அத் தாட்சி சான்றிதழ், நேரடி யாக எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதுவோர்
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான அசல் மற்றும் மாற்று சான்றிதழ்
சமர்ப்பிக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்களுக்கு புதுவையில் தேர்வு மையம் ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.