பிளஸ் 2 தேர்வில் கற்றல் குறைபாடுடைய
மாணவர்களுக்கான பயிற்சி ஏட்டிலிருந்து நிறைய வினாக்கள் கேட்கப்பட்டதால்
அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள் என்று
கல்வித்துறை உயர் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பள்ளி மாணவர்களின் கற்றல்
திறனை அடிப்படையாக வைத்து விரைவாக கற்கும் மாணவர்கள், மெல்ல கற்கும்
மாணவர்கள் என்று வகைப்படுத்துகின்றனர் கல்வியியலாளர்கள். மெல்ல கற்கும்
மாணவர்களை பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்பதற்காக
இந்த ஆண்டு தேர்வுக்கு முன்னர் அவர்களுக்கான முக்கியமான வினா-விடை, சிறப்பு
பயிற்சிகள் எல்லா அரசுப் பள்ளிகளிலும் வழங்கப்பட்டது.இதன் மூலம் நடந்து
முடிந்த பிளஸ் 2 தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் 50 மதிப்பெண் களுக்கான
வினாக்கள் மெல்ல கற்கும் மாணவர்களுக்கான பயிற்சி கையேட்டிலிருந்து கேட்கப்
பட்டிருந்தது. இதனால், இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2-வில்
அதிக அளவில் தேர்ச்சியும் நல்ல மதிப்பெண்களும் பெறுவார்கள் என கல்வித்துறை
உயர் அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.இது சம்பந்தமாக கல்வித்துறை
அதிகாரிகளுக்கு தனியார் பள்ளிகளிலிருந்து வேறு மாதிரியான எதிர்வினை
வந்துள்ளது. “மெல்ல கற்கும் மாணவர்களுக்கான பயிற்சி ஏட்டிலிருந்து
கேள்விகளை எடுத்ததால, எங்க மாணவர்களுக்கு தேர்வு ரொம்ப கஷ்டமா இருக்கு.
இந்த முறை எங்க மாணவர்கள் நிறைய மார்க் எடுக்க மாட்டாங்க போலிருக்கு.
அதனால், நீங்க இப்படி வினாக்களை தேர்வு செய்யக்கூடாது”
என்கிறார்களாம்.இதற்கு தனியார் பள்ளிகளில் மெல்ல கற்கும் மாணவர்களுக்கான
பயிற்சி வினாக்கள் குறித்து பாடம் நடத்தாதது தான் காரணம். “பிளஸ் 2 பாடத்தை
2 ஆண்டுகளாக நடத்துகிறீர்கள், ஆனால், மெல்ல கற்கும் மாணவர்களுக்கான
பயிற்சி ஏட்டிலிருந்து கேட்கப்படும் வினாக்கள் கடினமாக இருக்கிறதா?” என்று
மறைமுகமாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கிண்டல் செய்கிறார்கள்.மெல்ல கற்கும்
மாணவர்களுக் கான பயிற்சி ஏடு அரசுப் பள்ளி களில் பிப்ரவரியில்தான் கொடுக்
கப்பட்டிருக்கிறது. இதையே இன்னும் முன்கூட்டியே வழங்கி னால் அரசுப் பள்ளி
மாணவர்கள் இன்னும் அதிகமான மதிப்பெண் கள் எடுக்க வாய்ப்பை ஏற்படுத்தித்
தரும். வரும் கல்வியாண்டிலிருந்து இந்த பயிற்சி ஏட்டை பள்ளிக் கல்வித்துறை
மாணவர்களுக்கு முன்கூட்டியே வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கருத்து
தெரிவித்தனர்.