அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் 35 ஆயிரம் பேர் சம்பளம் பெறுவதில் சிக்கல்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் 35 ஆயிரம் பேர் சம்பளம் பெறுவதில் சிக்கல்:

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நிதித்துறை நிதி ஒதுக்கீடு உத்தரவு இருந்தால் மட்டுமே சம்பளம் பெற முடியும், என கருவூலகத்துறை அறிவித்துள்ளதால் 35 ஆயிரம் ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு உதவி பெறும் உயர்நிலையில் 636 ம், ஆயிரத்து 99 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இந்தப்பள்ளிகளில் ஆண்கள் 10 ஆயிரத்து 407 பேரும், 24 ஆயிரத்து 417 பெண் ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கான சம்பளபில் தயாரிக்கப்பட்டு கருவூலகத்துறையில் ஒப்புதல் பெறப்பட்ட பின்பு இவர்களது வங்கி கணக்கில் இ.சி.எஸ்., முறையில் பணம் வழங்கப்பட்டு வந்தது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக நிதித்துறை சார்பில் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு வழங்கப்படும். இந்த உத்தரவு இல்லாமல், இது வரை கருவூலகத்துறை சம்பள் வழங்கி வந்தது. அந்த உத்தரவு பெற்ற பின் அதைனை கருவூலகத்துறை பெற்று கொள்ளும். அடுத்த மாதம் முதல் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளத்திற்கு நிதி ஒதுக்கீட்டு உத்தரவினை சம்பள பில்லுடன் சமர்ப்பிக்க வேண்டும், அப்போது தான் சம்பள பில்லுக்கு ஒப்புதல் வழங்கப்படும், இல்லை என்றால் சம்பள பில்லுக்கு ஒப்புதல் வழங்கப்பட மாட்டாது, என கருவூலகத்துறை உத்தரவிட்டுள்ளது. எப்போதுமே சம்பள நிதி ஒதுக்கீட்டு உத்தரவு தாமதமாகத்தான் வரும். இந்த உத்தரவு இல்லாமல், அடுத்த மாதம் 35 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தேர்வு நிலை, சிறப்பு நிலையில் மூன்று சதவீதம் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீட்டு உத்தரவு இல்லாமல் உயர்வுத்தொகையை பெற முடியாமல் ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர். தமிழக தழாசிரியர் கழக மாநிலை துணை செயலாளர் இளங்கோவன் கூறுகையில்,"" கருவூலகத்துறை புதிய நடைமுறையை அடுத்த மாதம் முதல் கடைபிடிக்க விருப்பதால், ஆசிரியர்கள் உரிய நேரத்தில் சம்பளம் பெற முடியாத நிலை ஏற்படும். இது வரை நிதி ஒதுக்கீட்டு உத்தரவை எதிர்பார்த்து கருவூலகத்துறை ஆசிரியர்கள் சம்பளத்திற்கு ஒப்புதல் வழங்கியது. நிதித்துறை ஒதுக்கீட்டு உத்தரவு கிடைக்கும் வரை ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படும், சிக்கல் ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையும், நிதித்துறையும் நடவடிக்கை எடுத்து உரிய நேரத்தில் உத்தரவு வழங்கி ஆசிரியர்கள் சம்பளம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்,"" என்றார்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H