சென்னை, தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், இந்த ஆண்டு முதல், முதுகலை தமிழ் வகுப்பு துவங்க உள்ளது.உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை தரமணியில் உள்ளது. வெளிநாடுகளில் உள்ள, தமிழ் அறிஞர்கள் ஆய்வு செய்வதற்கும், வெளிநாட்டினர், தமிழகத்தில் தங்கி தமிழ் படிக்கவும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் துவங்கப்பட்டது. இதில், எம்.பில்., - பிஎச்.டி., மாணவர்களே படித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு, "முதுகலை தமிழ் இலக்கியம் வகுப்பு துவக்கப்படும்" என
அறிவிக்கப்பட்டது. பல்கலை வழிகாட்டுதலின் படி, உயர்கல்வி நிறுவனத்தில், ஒரு
வகுப்பில் 10 மாணவர்களாவது சேர வேண்டும். ஆனால், முதுகலை தமிழ்
வகுப்புக்கு, போதுமான மாணவர்கள் சேரவில்லை. அதனால், மாணவர் சேர்க்கை ரத்து
செய்யப்பட்டது.
இன்னும், இரண்டு மாதங்களில், மீண்டும் முதுகலை வகுப்புக்கான மாணவர்
சேர்க்கை துவங்க உள்ளது. இதில், 10க்கும் மேற்பட்டோர் சேர்ந்தால் மட்டுமே,
வகுப்புகள் துவங்க முடியும். ஆனால், இம்முறை, 20க்கும் மேற்பட்டோர் சேருவர்
என உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன, அதிகாரிகள் தெரிவித்தனர்.







