Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
மறைந்த கல்வி அதிகாரியின் குடும்ப ஓய்வூதியத்தை 2 மனைவிகளுக்கும் சமமாக வழங்க ஐகோர்ட் உத்தரவு:
மறைந்த கல்வி அதிகாரியின் குடும்ப ஓய்வூதியத்தை 2 மனைவிகளுக்கும் சமமாக வழங்க ஐகோர்ட் உத்தரவு:
கன்னியாகுமரியைச் சேர்ந்த, மறைந்த ஓய்வு
பெற்ற முதன்மைக் கல்வி அலுவலரின், 2 மனைவி களுக்கும் சமமாக பங்கிட்டு,
குடும்ப ஓய்வூதியப் பலன்கள் வழங்க வேண்டும், என அரசுக்கு, மதுரை ஐகோர்ட்
கிளை உத்தரவிட்டது.கீழ்கல்குறிச்சியை சேர்ந்த விசாலாட்சியம்மா
தாக்கல் செய்த மனு எனது கணவர் ஸ்தாணு நாதன் தம்பிக்கும், எனக்கும் 1958 ல்,
திருமணம் நடந்தது.
எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். என்னை கைவிட்ட
அவர், 1965ல்,
வசந்தகுமாரி தங்கச்சியை திருமணம் செய்தார். அவருக்கு 3 ஆண் குழந்தைகள்
பிறந்தனர். ஸ்தாணு நாதன் தம்பி முதன்மைக் கல்வி அலுவலராக பணிபுரிந்து,
ஓய்வு பெற்றார். அவர், 2012 ல் இறந்தார்.குடும்ப
ஓய்வூதியப் பலன்கள் கோரி, கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்,
சென்னை "அக்கவுன்டன்ட் ஜெனரல்' அலுவலகத்திற்கு விண்ணப்பித்தேன். அவர்கள்,
"குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு வாரிசுதாரராக, வசந்தகுமாரி தங்கச்சியை
ஸ்தாணு நாதன் தம்பி நியமித்துள்ளார்,' என, நிராகரித்தனர். என்னிடம், அவர்
சட்டப்பூர்வமாக விவாகரத்து கோரவில்லை. 2 வது மனைவியை வாரிசுதாரராக நியமிக்க
முடியாது. எனக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு
குறிப்பிட்டார். நீதிபதி ஆர்.மகாதேவன் முன் மனு விசாரணைக்கு வந்தது.
வசந்தகுமாரி தங்கச்சியின் தரப்பில்," ஸ்தாணு நாதன் தம்பியை திருமணம்
செய்து, அவருடன் 47 ஆண்டுகள் குடும்பம் நடத்தியுள்ளேன். கடைசிவரை, அவரை
பராமரித்தேன். குடும்ப ஓய்வூதியம் பெற எனக்கு தகுதி உண்டு,' என
வலியுறுத்தப்பட்டது. நீதிபதி: பெண்களை குடும்ப வன்முறையிலிருந்து
பாதுகாக்கும் சட்டப்படி, ஒரே வீட்டில் ஆணும், பெண்ணும் சேர்ந்து
வாழ்ந்தாலும், திருமணம் செய்து அல்லது விருப்பத்தின் அடிப்படையில் இருவரும்
சேர்ந்து வாழ்ந்தாலும், அதை குடும்பமாகத் தான் கருத வேண்டும். மனைவியாக
வசந்தகுமாரி 47 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். அதனால் தான், அவரை வாரிசுதாரராக
ஸ்தாணு நாதன் தம்பி நியமித்துள்ளார்.சட்டப்படி
மனைவியாக இருந்தாலும், அல்லது ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்ந்தாலும்,
பராமரிப்புத் தொகை வழங்க வேண்டும். வருவாய் ஈட்டும் கணவர் இறந்து விட்டால்,
குடும்பம் நல்லநிலையில் வாழ்வதற்காகத் தான், குடும்ப ஓய்வூதியத் திட்டம்
ஏற்படுத்தப்பட்டது. இவ்வழக்கின் சூழ்நிலை வேறு. விசாலாட்சியம்மா மற்றும்
வசந்தகுமாரி தங்கச்சிக்கு சமமாக பங்கிட்டு, குடும்ப ஓய்வூதியப் பலன்களை
வழங்க வேண்டும். இதில் ஒருவர் முதலில் இறந்துவிட்டால், உயிருடன்
உள்ளவருக்கு முழுத் தொகையையும், அரசு வழங்க வேண்டும், என்றார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








