Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
பள்ளி திறப்பு நாளில் நோட்டு, புத்தகம் வழங்காத பள்ளிகள் மீது நடவடிக்கை: இணை இயக்குனர் எச்சரிக்கை:
பள்ளி திறப்பு நாளில் நோட்டு, புத்தகம் வழங்காத பள்ளிகள் மீது நடவடிக்கை: இணை இயக்குனர் எச்சரிக்கை:
பள்ளி
திறக்கும் நாளில், விலையில்லா நோட்டு, புத்தகங்களை வழங்காத பள்ளிகள் மீது
நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர்
ஸ்ரீதேவி எச்சரிக்கை விடுத்துள்ளார். தஞ்சாவூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம், தஞ்சாவூர் தூய
அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
இதில், பள்ளி கல்வித்துறை இணை
இயக்குனர் ஸ்ரீதேவி பேசியதாவது: பள்ளிதிறக்கும்
போது, அனைத்து மாணவர்களுக்கும், தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா
பொருட்களான புத்தகம், நோட்டு ஆகியவை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
படிப்படியாக மற்ற விலையில்லா பொருட்களான சீருடை, எழுது பொருட்கள்
வழங்கப்படும். தமிழக அரசின் விலையில்லா நோட்டு, புத்தகங்களை, பள்ளி
திறக்கும் நாளில் வழங்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எல்லா
பள்ளிகளிலும், மழை நீர் சேகரிப்பு தொட்டி அவசியம் இருக்க வேண்டும். ஏற்கனவே
வழங்கப்பட்டுள்ள இலவச பஸ் பாஸை, மாணவர்கள் ஆகஸ்ட் மாதம் வரை பயன்படுத்திக்
கொள்ளலாம். புதிதாக இலவச பஸ் பாஸ் பெற தகுதியுள்ள மாணவர்களுக்கு, தாமதம்
இன்றி பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். முதன்மை
கல்வி அலுவலர் தமிழரசு, அனை வருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர்
மாரிமுத்து, மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் ரெங்கராஜன், மாவட்ட தொடக்க கல்வி
அலுவலர் கண்ணையன், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஜெயராஜ் உட்பட பலர்
பங்கேற்றனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








