
வைராக்கியம்தான் எனக்கு அதிகம்இருக்கு!''எனும் மேகலாவின்ஒவ்வொரு வார்த்தையிலும், தன் தாய்ஜெயாவின் மீதான பாசம்பொங்குகிறது.''எங்களுக்குச் சொந்த ஊர்... வேலூர்மாவட்டம், முனூர்.அப்பா செக்யூரிட்டியா வேலை பார்க்கிறார்.
எடுத்தா... லேப்ல அதிக நேரம் நிக்கவேண்டி வரும்ங்கிறதால, பி.ஏஇங்கிலீஷ் சேர்ந்தேன்.என் படிப்புக்காகமுனூர்ல இருந்து,சித்தேரிக்கு வீட்டையே மாத்திட்டு வந்துட்டாங்க.ஆனாலும், காலேஜுக்கும் வீட்டுக்கும்15 கிலோ மீட்டர் தூரம். இந்ததூரத்தை எப்படி கடந்து காலேஜுக்கு போகப்போறோம்னு எனக்கு கவலை.ஆனா,அம்மா ஒரு திட்டத்தோடயே இருந்திருக்காங்கங்கறது... காலேஜ் தொடங்கின
அன்னிக்குத்தான் தெரிஞ்சுது.தினமும் காலையில சமையல்,வீட்டு வேலைகளை எல்லாம்முடிச்சு வெச்சுட்டு,என்னை சைக்கிள்ல உக்கார வெச்சு,வேகவேகமா கூட்டிட்டுப் போய்காலேஜ்ல விடுவாங்க அம்மா. காலேஜ்8.50 மணிக்கு ஆரம்பிச்சி, 1.30மணி வரைக்கும் நடக்கும்.அதுவரைக்கும்வாசல்லயேகாத்திருந்து, வீட்டுக்குக்கூட்டிட்டு வருவாங்க.எனக்கு உடம்பு சரியில்லாதசமயங்கள்ல, கிளாஸ் ரூமுக்கே தூக்கிட்டுப் போய் உக்காரவெச்சிட்டு வருவாங்க. இதுக்காகஒரு நாளும் சோர்ந்ததில்லை.'இவளை ஓரமா விட்டுட்டு பொழப்பைப்பார்க்காம, எதுக்கு இப்படி தூக்கிச்சுமக்கிறே?’னு அம்மாகிட்ட பலரும்கேட்டிருக்காங்க. அதையெல்லாம்கேட்டு கொதிச்சிப் போன அம்மா, அந்தமாதிரி கேட்டவங்களுக்கு முன்ன,என்னை ஆளாக்கிக் காட்டணும்ங்கிறதீயோட இரவும் பகலுமா சுழன்றது...மனசுல இருக்கு. நல்லா பிறக்கிறபொம்பளைப்பிள்ளைகளையே படிப்பை பாதியிலநிறுத்தற எத்தனையோ அம்மாக்கள்இருக்காங்க. ஆனா, என்னைத்தூக்கி சுமக்கும்போதெல்லாம்,முகத்துல அந்த பாரத்தைக்கூடதுளியும் காட்டாதஅம்மாவை எனக்கு கொடுத்திருக்கிறகடவுளுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. பொம்பளைங்களுக்கு மனதைரியம் ஜாஸ்தினு சொல்லுவாங்க.அது வெளியில தெரியாதுனும்சொல்லுவாங்க. அதை எங்கம்மாகிட்டநான் நேர்லயே உணர்றேன்.இத்தனை வருஷமா படாதபாடுபட்டு வளர்த்தெடுத்ததைவிட, இந்தமூணு வருஷமா என்னை காலேஜ்லகொண்டுவிடறதுக்காக தினமும் அவங்கசைக்கிள்மிதிச்சது ஒண்ணே போதும்..!''எனும்போதுகண்களில்நீர்த்திரையிடுக
ிறது மேகலாவுக்கு.''சுயபச்சாதாபத்துல நான்தளர்ந்துடாம எப்பவும்நம்பிக்கை வார்த்தைகள்சொல்லிட்டே இருப்பாங்க அம்மா. 'நீநல்லா படிச்சு,நிச்சயமா ஒரு வேலைக்குப் போய்,உன்னை மாதிரி இருக்கிறவங்களுக்கும், அவங்களோட அம்மாக்களுக்கும்நம்பிக்கை தர்றமுன்னோடியா இருக்கணும்’னு என்மனசுக்கு பாச மந்திரம்போட்டுட்டே இருப்பாங்க.இப்போ மூணாவது வருஷம்படிக்கிறேன்.இத்தனை வருஷமா எனக்கு கால்களா இருக்கிறஅவங்க கால்களைத்தொட்டு கும்பிட்டுட்டு, நான் முதல்நாள் வேலைக்குப் போகப்போற தினம்...சில வருஷங்கள்ல நிச்சயமா வரும்!''கண்களின் நீர்த்துளிகள்துடைக்கிறார் மேகலா.''இவளை மேற்கொண்டு பி.எட் படிக்கவைக்கணும். இப்போ அதுக் கானதகவல்களைத்தான் படிச்சவங்க கிட்டஎல்லாம் கேட்டு சேகரிச்சுக்கிட்டு இருக்கேன். மேகலா பி.ஏ., பி.எட்...சொல்லிப்பார்க்கவே சந்தோஷமா இருக்கு.என்னையும் என் பிள்ளையையும்கேலி பேசினவங்களுக்கு எல்லாம்அப்போ சேர்ந்து தர்றோம் பதில்!'' -ஆக்ரோஷ அன்பு பேசுகிறார் ஜெயா!நன்றி - விகடன்








