திருவள்ளூர்
மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் மாறுதல் கலந்தாய்வு
17-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடைபெற உள்ளதாக கலெக்டர் வீரராகவராவ்
தெரிவித்துள்ளார். கலந்தாய்வு திருவள்ளூர்
மாவட்ட கலெக்டர் கொ.வீராராகவராவ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-திருவள்ளூர்
மாவட்டத்தில் தொடக்க கல்வி துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றியம்,
நகராட்சி மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள
காலிபணியிடங்களில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு
மற்றும் மாறுதல் அளித்தல் கலந்தாய்வு கூட்டம் திருவள்ளூரை அடுத்த புனித
அந்தோணியார் நடுநிலைப்பள்ளியில் வருகிற 17-ந் தேதி (செவ்வாய்க்கிழமை)
நடைபெற உள்ளது. முற்பகல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு
மாறுதல் கலந்தாய்வும், பிற்பகல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி
உயர்வு கலந்தாய்வும் நடைபெற உள்ளது. 18-ந் தேதி (புதன்கிழமை) முற்பகல்
பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வும், பிற்பகல் பட்டதாரி ஆசிரியர்
ஒன்றியத்திற்குள் மாறுதலும், பதவி உயர்வு கலந்தாய்வும் நடைபெற உள்ளது.மாவட்டம் விட்டு மாவட்டம்
19-ந் தேதி (வியாழக்கிழமை) பட்டதாரி ஆசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதல்
கலந்தாய்வும், 21 -ந் தேதி (சனிக்கிழமை) பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டம்
விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வும், 23-ந் தேதி (திங்கட்கிழமை)
முற்பகல் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வும்
பிற்பகல் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வும்
நடைபெற உள்ளது. 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இடைநிலை ஆசிரியர்
பணிநிரவல் கலந்தாய்வும் , 25-ந் தேதி (புதன்கிழமை) இடைநிலை ஆசிரியர்
ஒன்றியத்திற்குள் மாறுதல் கலந்தாய்வும், 26-ந் தேதி (வியாழக்கிழமை) இடைநிலை
ஆசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதல் கலந்தாய்வும் (ஒன்றியம் விட்டு
ஒன்றியம்) 28-ந் தேதி (சனிக்கிழமை) இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு
மாவட்டம் மாறுதல் கலந்தாய்வும் நடைபெற உள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







