Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
Unlabelled
ரூ.41 கோடியில் ஆசிரியர் இல்லங்கள், உண்டு உறைவிட பள்ளிகள், வகுப்பறை கட்டிடங்கள்:
ரூ.41 கோடியில் ஆசிரியர் இல்லங்கள், உண்டு உறைவிட பள்ளிகள், வகுப்பறை கட்டிடங்கள்:
தமிழகம்
முழுவதும் ஆசிரியர் இல்லங்கள், உண்டு உறைவிட பள்ளிகள், வகுப்பறை
கட்டிடங்கள் என ரூ.40 கோடியே 80 லட்சம் மதிப்புள்ள கட்டிடங்களை
முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.இடைநிற்றல் இல்லாமல்இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
-பள்ளி
மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக, குறிப்பாக ஏழை-எளிய மக்களின்
குழந்தைகள் அனைவரும் இடைநிற்றல் இன்றி கல்வி பயில்வதற்கு ஏதுவாக சிறப்பு
ஊக்கத்தொகை, மடிக்கணினிகள், மிதிவண்டிகள், விலையில்லா புத்தகங்கள், நோட்டு
புத்தகங்கள், சீருடைகள், புத்தகப்பை, கணித உபகரண பெட்டிகள், காலணிகள்,
வண்ணப்பென்சில்கள் ஆகியவற்றை மாணவர்களுக்கு வழங்குதல், பள்ளிகளின்
கட்டமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற பல திட்டங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா
தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.திறந்துவைத்தார்அதன்
அடிப்படையில், நாமக்கல் மாவட்டம், மோகனூர் அரசு மகளிர்
மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.2 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள
24 வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் ஆய்வக கட்டிடங்கள் ஆகியவற்றை
முதல்-அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலமாக திறந்துவைத்தார்.மேலும்,
நபார்டு வங்கி கடன் உதவியுடன் கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர்,
தூத்துக்குடி, தருமபுரி, கடலூர், நாமக்கல் மற்றும் ஈரோடு ஆகிய
மாவட்டங்களில் 21 பள்ளிகளுக்கு ரூ.22 கோடியே 79 லட்சம் மதிப்பீட்டில்
கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்; அனைவருக்கும் கல்வி
இயக்கத்தின் மூலம் கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களிலுள்ள 10 முதல் 14 வயது
வரையிலான பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற பெண் குழந்தைகள் கல்வியைத் தொடர
வசதியாக 61 கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா என்னும் உண்டு உறைவிட
சிறப்பு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.உண்டு உறைவிட பள்ளிகள்இதில்,
கட்டிடங்கள் இல்லாத சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு ஆகிய
மாவட்டங்களில் உள்ள சிறப்பு பள்ளிகளில் பயிலும் 782 தாழ்த்தப்பட்ட மற்றும்
பழங்குடியின மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.3 கோடியே 49 லட்சம்
மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு
உறைவிட பள்ளி கட்டிடங்கள்;தொலைதூர மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில்
உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் கோயம்புத்தூர் மாவட்டம்-ஒண்டிப்புதூர்
மற்றும் திருப்பூர் மாவட்டம்-அவிநாசி ஆகிய இடங்களில் அமைந்துள்ள உண்டு
உறைவிட பள்ளிகளில் பயிலும் 100 மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.73
லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் முதல்-அமைச்சர்
திறந்துவைத்தார்.நூலக கட்டிடங்கள்அனைவருக்கும் கல்வி
இயக்கத்தின் கீழ் கோயம்புத்தூர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர்,
திண்டுக்கல், திருவாரூர், காஞ்சீபுரம், ஈரோடு, திருநெல்வேலி, விழுப்புரம்
மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 40 பள்ளிகளில் ரூ.4
கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை
கட்டிடங்கள்;தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையின் சார்பில் வேலூர்,
தூத்துக்குடி, கோயம்புத்தூர், நாமக்கல் மற்றும் சிவகங்கை ஆகிய
மாவட்டங்களில் 47 ஆயிரத்து 91 வாசகர்கள் பயனடையும் வகையில் ரூ.2 கோடியே 6
லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நூலக கட்டிடங்கள்; என மொத்தம் ரூ.35
கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளி மற்றும் நூலக
கட்டிடங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.அடிக்கல் நாட்டினார்அலுவல்
பணி நிமித்தம் சென்னைக்கு வரும் ஆசிரியர்கள் குறைந்த செலவில் தங்குவதற்காக
சென்னை சைதாப்பேட்டையில் அமைந்துள்ள ஆசிரியர் இல்லத்தில் ரூ.2 கோடியே 50
லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் அறைகள்; திருச்சிராப்பள்ளியில்
ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள ஆசிரியர் இல்லக்கட்டிடம்
என மொத்தம் ரூ.5 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டிலான கட்டிடங்களுக்கு
முதல்-அமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.ஆக மொத்தம், பள்ளி
கல்வித்துறையின் சார்பில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டி,
திறந்து வைத்த கட்டிடங்களின் மொத்த மதிப்பு ரூ.40 கோடியே 80 லட்சம் ஆகும்.அமைச்சர், அதிகாரிகள்இந்த
நிகழ்ச்சியில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தலைமைச்
செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா
பாலகிருஷ்ணன், பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் த.சபிதா, மாநில திட்ட
இயக்குனர் அனைவருக்கும் கல்வி இயக்கம் பூஜா குல்கர்ணி, பள்ளிக்கல்வி
இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








