தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில்
சேர விண்ணப்பித்துள்ள மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப்
பிரிவினருக்கு சென்னையில் வரும் 17-ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது.ஜூன் 14-இல் தரவரிசைப் பட்டியல்: மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்துள்ள
பிளஸ் 2 மாணவர்களின் விடைத் தாள்களை மதிப்பீடு செய்து திருத்தப்பட்ட
மதிப்பெண்ணை வெள்ளிக்கிழமை (ஜூன் 13) அளிப்பதாக மருத்துவக் கல்வி தேர்வுக்
குழு அதிகாரிகளிடம் பள்ளி கல்வித் துறை கூறியுள்ளது.
இதையடுத்து ஜூன் 13-ஆம் தேதி முழுவதும் பணி செய்து தரவரிசைப் பட்டியலை தயாரிக்க மருத்துவக் கல்வி தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் வரும்
சனிக்கிழமை (ஜூன் 14) தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்
துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர்
எஸ்.கீதாலட்சுமி, மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர்
ஆர்.ஜி.சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
அன்றைய தினம் சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.








