இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் தமிழாசிரியர் இர.பொன்னம்பலம் கலந்து கொண்டனர். நல்லூர் பட்டதாரி ஆசிரியர் வ.விஜயன் உலக அகதிகள் நாள் குறித்த சிறப்புக் கவிதையை வாசித்தார். ஓய்வு பெற்ற அஞ்சலக அலுவலர் ந.இராதாகிருஷ்ணன், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்க செயலாளர் பா.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்விற்கு தலைமையேற்ற நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் “ உலக மக்களும் புலம் பெயர்ந்தோர் வாழ்வும்...” எனும் தலைப்பில் பேசும்போது, உலகம் முழுவதும் வாழும் 800 கோடி மக்களில், 4 கோடியே 20 இலட்சம் மக்கள் இன்றைக்கு தனது சொந்த நாட்டினை விட்டு, அகதிகளாய் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகிறனர். உள்நாட்டுப் போர், இயற்கைச் சீற்றம், தீவிரவாதிகளின் தாக்குதல், வன்முறைகள் என பல்வேறு காரணங்கள் அவர்களை சொந்த நாட்டில் வாழ விடாமல் விரட்டுகின்றன. இப்படி அகதி வாழ்க்கை வாழ நேர்கிற மக்கள் படுகிற இன்னல்களை சொல்லி மாளாது. அகதிகள் முகாம்களில் இவர்கள் எதிர்கொள்கிற பலதரப்பட்ட துன்பங்கள் மனித உரிமைக்கே முற்றிலும் எதிரானவை.