Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
MBBS ADMISSION
புதுவையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக 265 இடங்கள் வழங்க முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது:
புதுவையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக 265 இடங்கள் வழங்க முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது:
புதுவையில் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு
சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தனியார் மருத்துவம்,
பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்கள் அடிப்படையில் மாணவர்கள்
அனுமதிக்கப்படுகின்றனர். தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஆண்டுதோறும்
அரசுக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகிறது. ஆனால் மருத்துவ கல்லூரிகளில்
ஒப்பந்தப்படி 50 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. புதுவையில்
உள்ள 7 தனியார் மருத்துவ கல்லூரிகளில் 900 இடங்கள் உள்ளன. இதில் 450
இடங்கள் அரசுக்கு கிடைக்க வேண்டும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக அரசு
ஒதுக்கீடாக 265 இடங்கள் மட்டுமே பெறப்படுகிறது. எனவே ஒப்பந்தப்படி தனியார்
மருத்துவகல்லூரிகளில் 50 சதவீத இடங்களை கேட்டுப் பெற வேண்டும் எனவும்
அப்படி கொடுக்காத கல்லூரிகள் உரிமத்தை ரத்து செய்ய வேண்டுமென அரசியல்
கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்தாண்டு
சென்டாக் சேர்க்கைக்கு மே மாதம் 9ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஆன்லைன்
மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. பூர்த்தி
செய்த விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் கடந்த 10ம் தேதி ஆகும்.
அதன்படி இதுவரை 7,300 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. இந்த விண்ணப்பங்களை
கணினியில் பதிவு செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். மாணவர்கள்
மதிப்பெண் தரவரிசை பட்டியல் ஜூன் 3வது வாரத்தில் வெளியாகுமென
எதிர்பார்க்கப்படுகிறது. புதுவை அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்
சேர்க்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி கிடைத்த பிறகே சென்டாக்
கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
இந்நிலையில்
புதுவையிலுள்ள 7 தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களை
பெறுவது தொடர்பான கூட்டம் புதுவை வணிக வரித்துறை கருத்தரங்க அறையில் நேற்று
மாலை நடந்தது. முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்
சுகாதாரத் துறை செயலர் ராகேஷ்சந்திரா, இயக்குனர் டாக்டர் ராமன் மற்றும்
பிம்ஸ், மகாத்மாகாந்தி, மணக்குள விநாயகர், வினாயகா மிஷன், லட்சுமி நாராயணா,
அறுபடைவீடு மற்றும் வெங்கடேஸ்வரா ஆகிய மருத்துவக் கல்லூரிகளின்
நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் முதல்வர் ரங்கசாமி
நிருபர்களிடம் கூறுகையில், இந்த ஆண்டும் அரசு ஒதுக்கீடாக 265 இடங்கள் வழங்க
தனியார் மருத்துவக்கல்லூரி நிர்வாகங்கள் ஒப்புக்கொண்டன என தெரிவித்தார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








