Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
கல்வித்துறை ஆய்வு-அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பிலும் ஆங்கில வழிக்கல்வி:
அரசு பள்ளிகளில் 1ம், 6ம் வகுப்புகளை தொடர்ந்து,
பிளஸ்1 வகுப்பிலும் ஆங்கில வழிக்கல்வி தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள்
பற்றி கல்வித்துறை ஆராய்ந்து வருகிறது.தமிழகத்தில்
ஆங்கில வழிக்கல்விக்கே பெற்றோர் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதன்
காரணமாக கிராமப்புறத்தை சேர்ந்தவர்களும் அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை
சேர்ப்பதை தவிர்த்து ஆங்கில வழியில் கற்றுத்தரும் தனியார் பள்ளிகளை தேர்வு
செய்கின்றனர். இதனால், மாணவர் சேர்க்கை குறைந்ததால், கடந்த கல்வி ஆண்டு
முதல் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த
ஆண்டு 1, 6ம் வகுப்புகளில் ஒரு பிரிவில் மட்டும் ஆங்கில வழியில்
கற்றுத்தரப்படும் எனவும் அதற்கேற்ப மாணவர்களை சேர்க்குமாறும் கல்வித்துறை
மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியது. இதன்படி மாநிலம் முழுவதும்
அரசுப் பள்ளிகளில் 1ம் மற்றும் 6ம் வகுப்புகளில் ஒரு பிரிவில் மட்டும்
ஆங்கில வழியில் மாணவர்களை சேர்த்து வருகின்றனர். இந்த முயற்சிக்கு சில
இடங்களில் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதற்கிடையே
ஆங்கில வழிக்கல்வியில் பயின்று 10ம் வகுப்பு பாஸ் செய்த மாணவர்கள் பலர்
அதிகமதிப்பெண் எடுத்தும் பிளஸ் 1ல் அவர்கள் விரும்பும் பாடப்பிரிவில் சேர
அவர்கள் படித்த பள்ளியிலேயே கிடைக்காமல் தவிக்கின்றனர். பல மாணவர்கள்
மாற்றுப்பள்ளிகளில் இடம் தேடி அலைகின்றனர். இதனால், ஆங்கில வழிக்கல்வியில்
சேர இடம் கிடைக்காமல் திண்டாடும் மாணவர்கள் குறித்த விவரம் சேகரிக்கப்பட்டு
வருகிறது. எனவே அரசுப்பள்ளிகளில் மேல்நிலையிலும் (11ம் வகுப்பு) ஆங்கில
வழிக்கல்வியை தொடங்கலாமா என்பது குறித்து கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.
இதுதொடர்பான விபரங்கள் மற்றும் இதற்கான வாய்ப்புகள் குறித்து அறிக்கை
தயாரித்து வழங்குமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் மாநில கல்வித்துறை
கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








